பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 ல் பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

மாலைகள் புலால் நாற்றம் வீசும். இந்த மாலைகள் இராவணனிடத்து அச்சங்கொண்டு தேவர்கள் கொணர்ந்து கொடுத்தவையாகும். இலங்கையைச் சூழ்ந்த மதிள்கள் சுழலும். எல்லாத் திக்குகளிலும் தீப்பற்றி எரியும். கற்பகச் சோலைகள், கரிந்து தோன்றும் மங்களகரமான பூர்ண கும்பங்கள் விரிந்தனவாகி உடையும் ஒளியை இருள் சூழ்ந்து மறைக்கும். தோரணங்கள் முறியும். யானைகளின் விளைந்த தந்தங்கள் ஒடிபடும். மறையொலி முழங்கி காட்டிய பூர்ண கும்பத்து தூய்மை நீர் கள்ளாகிப் பொங்கும். விண்வெளியில் உலவும் அம்புலியைப் பிளந்துகொண்டு விண்மீன்கள் புறப்படும். விண்ணில் கவிந்து பரந்த மேகங்கள் குருதி மாரியைப் பொழியும். சக்கரம் வாள் வில் முதலிய ஆயுதங்கள் பேரொவியால் கடல் ஒலியும் மாறுபடும்படி தாமே போரிடும். மங்கையர் அணிந்துள்ள தாலிகள் பிறர் அறுக்காமலேயே தாமாக அவர்கள் கொங்கை மேல் அறுந்து விழும்” இங்ங்னம் கூறிய முறைப்படியே இத்திக் குறியினது அற்புதத்தை இன்னும் கேட்பாயாக என்று கூறி 'இராவணனது துணைவியாரின் கூந்தல் அவிழ்ந்து நிறைந்து விழுந்தன. அக்கூந்தல் அருகிலிருந்த விளக்கின் சுடர் பற்ற, அது சுறுசுறுவென்று விரைந்து வெந்தது. இவையாவும் கொடிய அரக்கர்கள் யாவரும் துன்புற்று அழிவதற்கு அறிகுறியாகும்” என்று விளக்குவாள்.

5. கனவுகள்: கனவுகளால் பலன் விளையும் என்ற நம்பிக்கை இன்று மக்களிடையே நிலவுவதைக் காணலாம். அதுவும் அதிகாலையில் கனவுக்கு பலன் ஏற்படுவது உறுதி என்பது அவர்களின் அதிராத நம்பிக்கை. இத்தகைய நம்பிக்கைகளையும் காவியத்தில் இடம் பெறச் செய்துள்ளனர் கவிஞர்கள்.

திருவள்ளுவர் காமத்துப் பாலில் "கனவுநிலை யுரைத்தல்" என்ற ஓர் இயலையே வகுத்துக் காட்டியுள்ளார்.