பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் ; 139

இதனை "தலைமகள் தான் கண்ட கனவினது நிலைமையைத் தோழிக்குச் செல்லுதல், அக்கனவு நனவின்கண் நினைவு மிகுதியாற் கண்டதாகலின்” என்று பரிமேலழகர் விளக்குவர். இவர் விளக்கம் இக்கால ஃபிராயிடு போன்ற உளவியல் வல்லுநர்களின் கருத்திற்கு ஒத்திருப்பதைக் கண்டு நாம் வியக்கின்றோம். இதனைக் குறுந்தொகைப் பாடல் ஒன்றால் கண்டு மகிழ்கின்றோம். தலைவன் வரைவிடை வைத்துப் பொருளின் பொருட்டுப் பிரிந்த காலத்தில் தலைவியின் ஆற்றாமைக் காரணத்தைத் தோழி வினவுகின்றாள். அதற்கு மறுமொழியாக, "இயல்பாக ஆற்றியிருக்கும் யான் தலைவனை மருவியதாகக் கண்ட பொய்க்கனவினால் வருத்தமுறுவேன் ஆயினேன்” என்று கூறுவாள்.

கேட்டிசின் வாழி தோழி அல்கல் பொய்வ லாளன் மெய்யறன் மரீஇய வாய்த்தகைப் பொய்க்கனா மருட்டவேற் றெழுந்து அமளி தைவந் தனனே குவளை வண்டுபடு மலரில் சாஅய்த்

தமியேன் மன்ற வளியோன் யானே?

என்பது கச்சிப் பேட்டு நன்னாகையார் பாட்டு. "இராக்காலத்தில் பொய் புகலுவதில் வல்ல தலைவன் என்னைத் தழுவியதாகப் பொய்க்கனா மயக்கத்தை உண்டாக்க, துயிலுணர்ந்து எழுந்து தலைவன்தான் என்று எண்ணி படுக்கையைத் தடவினேன். வண்டுகள் வீழ்ந்து உழக்கிய குவளை மலரைப் போல மெலிந்து தனித்தவளாக இருப்பதைக் கண்டேன்” என்கின்றாள்.

அகநானூற்றிலும் இத்தகைய கனா ஒன்று குறிப்பிடப் பெறுகின்றது. ஈண்டு இது பொருள் முற்றி மீண்ட தலைவன்

58. குறுந் 30