பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 7

பரகதி சென்று அடைவரிய பரிசேபோல் என்ற பாடம்

இனிது பொருள்படும்.

இனி, முதலடிக்கு, 'திரிமூர்த்திகளில் சேர்ந்த சிவபெருமானையும் திருமாலையும் சமமாகக் கருதாமல், சிவபெருமான்தான் சிறந்தவன், அல்லது திருமால்தான் சிறந்தவன் என்று பட்சபாதமாகக் கூறுகின்ற தத்துவ ஞானமில்லாத மூடர்க்கு” என்று பொருள் உரைப்பாருமுளர். அரியும் சிவனும் ஒன்று; அன்று" என்பவர் வாயிலே மண்ணு' என்று உலகில் சாமானியமாக வழங்குகின்ற பழமொழியின் கருத்துக் கொண்டது இந்த இரண்டாவது பொருள்.

கம்பன் ஏதோ பத்தரைமாற்றுத் தங்கம்போல தனது

கவிதைககளை நமக்கு வைத்துப் போனான். 'செம்புபோன்ற உலோகத்தைச் சேர்த்து பணிப்பொன் ஆக்குவதுபோல், சமயச்சார்புடைய புலவர்கள்

பாடபேதத்தைச் சேர்த்து, தமக்கு வேண்டியவாறு பொருளுரைத்துக் கொள்வர். அவர்கள் வாழ்க

(2) மகரக் கண்ணன் மாய்ந்த பின்னர் இந்திரசித்து பெரும்படையுடன் தேரேறிப் போருக்குப் புறப்படு கின்றான். ஒரு கட்டத்தில் இந்திரசித்து மாயையால் வானத்தில் மறைந்து மலரவன் கணை தொடுக்கச் செவ்வி நோக்கியுள்ளான். மகோதரன் இந்திரன் உருக்கொண்டு ஐராவத உருவுள்ள யானைமீது ஏறி வானவர், இருடியர் முதலியவர்கள் உருக்கொண்ட வீரருடன் இலக்குவனை நோக்கி எதிர்த்து வருகின்றான். இலக்குவன் அதிசயித்து "இஃது ஏன்? என்று மாருதியை வினவுகின்றான். இச்சமயத்தில் இந்திரசித்து மலரவன் கணையை விடுக்க, இலக்குவன் அறிவொடுங்கிச் சாய்கின்றான். வானரவீரர் கட்கும் இதே கதிதான், தம்பி உயிரொடுங்கிக் கிடந்த

11. அறியாதவர் வாயிலே என்றும் வழங்குவதுண்டு.