பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

ஏலாததோர் பழிச் சொல்லை இடுதேள் இடுமாறு போல் என்மீது போட்டனர். அப்பழி மொழியால் கோவலற்கு ஒரு துன்பம் உண்டாயிற்றென்று பிறர் கூறினர். அதனைக் கேட்ட நான் அவ்வூராளும் மன்னர் முன் சென்று வழக்கு உரைத்தேன். அதனால் அந்த அரசனோடு அந்த ஊருக்கும் உற்றதோர் தீங்குண்டு. அது தீக்கனாவாதலால் நினக்கு அதனை உரையேன். அப்பொழுது கடிய தொரு குற்றம் உண்டாயிற்று அத்தீக்குற்றத்தை" உற்ற என்னோடு பொருந்திய என் கணவனுடன் யான் பெற்ற நற்பேற்றினைக் கேட்பாயாகில் அது நினக்கு நகைப்பைத் தரும்” என்கின்றாள். இது மதுரையில் கோவலனுக்கு ஏற்படட் போகும் நிகழ்ச்சியைக் குறிப்பதாகும்.

கம்பன் காவியத்தில் கனவு பற்றிய குறிப்புகளைக் காண்போம். சீதாப்பிராட்டியிடம் தான் கண்ட நன்னிமித்தத்தைக் கூறிய திரிசடை, தான் கண்ட கனவையும் கூறுவாள். "சீதாப்பிராட்டியே, நீ உறக்கமில்லாதவளாய் இருப்பதால் நினக்குக் கனவுகள் வரவில்லை. எனக்கு ஒரு கனவு வந்தது. குற்றமுள்ள இந்நாட்டில் உண்டாகும் கனவு முதலிய தோற்றங்கள் பொய்ப்பதில்லை. என் கனவு இது: "கற்புக்கரசியே, இராவணன் தன் பத்துத் தலைகளிலும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு பெரிய கழுதைகளும் பேய்களும் பூட்டப் பெற்றுள்ளதேரின்மேல் சிவந்த ஆடையை உடுத்திக் கொண்டு தென்திசையை நோக்கிச் சென்றான். அவனுடைய மக்களும் உறவினர்களும் ஏனைய அரக்கர்களும் அத்திக்கையே நோக்கிச் சென்றனர். அவர்கள் யாவரும் திரும்பியே வரவில்லை. இதனால் இராவணன் குலத்தோடு அழிவது உறுதி"

62. தீக்குற்றம் - முலை திருகி எறிதல் 63. சுந்தர. காட்சி - 39, 40, 41 இது இல்லத்தில் நிகழ்ந்தது)