பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் இ 143

இன்னும் சில கனவுகள் வந்தன. அவற்றையும் கூறுவேன். இராவணன் வளர்க்கும் ஒமாக்கினிகள் ஒருசேர அவிந்தன. சிவந்த சுடரினையுடைய துரண்டா மணி விளக்குகள் விளங்கப் பெற்ற, அவனது பழைய மாளிகை அதிகாலையில் ஆகாயத்திலிருந்து விழுந்த பேரிடியால் இடிபட்டழிந்தது. இக்கனவுகளை விடியற்காலையில் கண்டமையால் விரைவில் பலிக்கும்” என்கின்றாள்.

மேலும் சில உற்பாதங்களைக் கூறியவள் இன்னும் தான் கண்ட கனவுகளைத் தெரிவிக்கின்றாள். அம்மையே, இப்பொழுது ஒரு சொப்பனம் உண்டாயிற்று. அது என்னவென்றால், ஒன்றுக் கொன்று துணையான இரண்டு ஆண் சிங்கங்கள், புலிக் கூட்டத்தைத் தமக்குத் துணையாகக் கொண்டு அதனோடு அளவற்ற மதயானைகள் உறையும் அந்தக் காட்டை இடைவிடாமல் வளைத்தன. எல்லையற்ற பினங்கள் விழும்படிக் கொன்று குவித்தன. அவ்வனத்திற்கு வந்திருந்த ஒருமயிலும் அந்தச் சிங்கங்களுடன் அவற்றின் நகரத்தை அடைந்தது" #

'ஆயிரம் அழகிய விளக்குகளைக் கொளுத்திய சிவந்த ஒளியையுடையதொரு பெருவிளக்கை திருக்கையில் ஏந்திக் கொண்டு செந்நிறமுள்ள பெண்மணி ஒருத்தி இராவணனது திருமாளிகையினின்றும் வீடணனின் திருமாளிகையை

. .65 அடையலானாள்:”

64. மேற்படி - 50, 51 இக்கனவினால் இராமலட்சுமணர்கள் வலியுள்ள வானரங்களைத் துணையாகக் கொண்டு இலங்கையைச் சார்ந்து அங்குள்ள அரக்கர்களையெல்லாம் கொன்று பிராட்டியைச் சிறை மீட்டுத் தமது நகரத்திற்குத் திரும்பிச் செல்லுதலைக் குறிப்பிட்டவாறு. 65. மேற்படி 52. இஃது இராஜ்யலட்சுமி இராவணனின் திருமாளிகையிலிருந்து வீடணனின் திருமாளிகையைச் சார்தலைக் குறிப்பதாகக் கொள்க.