பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் $ 145

அவற்றால் அவன் உருவாக்கப் படுகின்றவனாக உள்ளான். இத்துடன் இது நிற்க.

மனம் பற்றி இன்னொரு முக்கிய கருத்தையும் ஈண்டுக் கூறுவது மிகவும் பொருத்தமாகும். நீண்டகாலமாக மக்கள் உள்ளத்திலுள்ள நனவுப் பகுதியை மட்டிலுமே உளம்' (மனம்) என்று கருதி வந்தனர். இன்று சிக்மெண்ட் ஃபிராய்டு என்ற உளவியலறிஞர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக இக்கருத்து முற்றிலும் மாறி விட்டது. நனவு நிலை (Conscious level), passauto-flasia (Sub-Conscious level) நனவிலி நிலை (Unconscious level) என்று உளம் மனம்) முப்பகுதிகளாகச் செயற்படுவதாகக் கூறுகின்றார் ஃபிராய்டு. இக்கருத்தினை இன்று உளவியல் அறிஞர்கள் அனைவரும் ஒருமனத்துடன் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த உளநிலைகளை விளக்குவதற்கு வில்லியம் ஜேம்ஸ் என்ற உளவியலறிஞர் ஓர் அரிய உவமையைக் கையாளுகின்றார். வடபெருங்கடலினின்றும் (Arctic ocean) பெரும் பனிக்கட்டி மலைகள் விடுபட்டு அட்லாண்டிக் மாபெருங் கடலில் புகும். இம்மலைகளின் கொடுமுடிகளின் எட்டில் ஒரு பகுதியே புறத்தே புலனாகும். பனிக்கட்டி மலையொன்றினை முழு மனத்துடன் ஒற்றுமைபடுத்திக் கூறும்பொழுது சிறிதளவு தோன்றும் கொடுமுடியை நனவுளத்தோடு ஒப்புமை கூறலாம். அங்ங்ணம் நிலையாகத் தோன்றிக் கிடக்கும் கீழேயுள்ள சிறுபகுதி சுற்றியுள்ள அலை வீச்சினால் தோன்றியும் மறைந்தும் வரும் இதனை நனவடியுளத்துடன் ஒப்புமை கூறலாம். இதற்குக் கீழாகப் பெருமலைபோல் கிடக்கும் பகுதி தாக்கினால், பெருங் கப்பல்களும் அச்சுவேறு ஆணிவேறாகக் சீதையைக் காண்கின்றோம். இதனை நனவிலியுளத்திற்கு ஒப்பிடலாம். நனவு உளம் முழுஉள்ளத்தின் கோடியில் ஒரு பங்கே என்றும் கூறிவிடலாம். புறக்காற்றாலும் பிறவற்றாலும்