பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் $ 149

கம்பன் காவியத்திலிருந்து ஓர் எடுத்துக்காட்டு. இராவணன், தன் மருந்தனைய தங்கை சூர்ப்பணகையைத் காலகை என்றவளுடைய மக்களாகிய காலக் கேயருள் ஒருவனாகிய வித்யுத்சிகுவன் என்ற அரக்கர் தலைவன் ஒருவனுக்கு மனம் புரிவித்திருந்தான். அந்த மணமக்கள் இளவயதினராக இருந்த காலத்தில் இராவணன் திசைகள் தோறும் சென்று வெற்றி முழக்கம் செய்து வந்தான். மைத்துன உறவு இளவணனுக்கு அடி பணியத் துண்டவில்லை. மைத்துனர்களிடையே கடும் போர் நிகழ்கின்றது. சூர்ப்பண்கையின் கணவன் கொல்லப்படு கின்றான் அதுமுதல் இராவணனுடன் இருக்க வேண்டிய வளாகின்றாள் கைம்பெண் சூர்ப்பனகை நாத்திகியின் கொடுமை ஏற்படும் என்ற காரணத்தாலோ வேறு என்ன காரணத்தாலோ இராவணன் சூர்ப்பணகைக்குத் தண்டாவனத்தில் இருக்க இடம் வைத்து அவளுக்குத் துணையாகத் தன் ஒன்றுவிட்ட சகோதரர்களாகிய கர-துரனர்களை அறுபதினாயிரம் வீரர்களடங்கிய சேனையுடன் காவலும் வைத்தான். இராமனைக் காதலித்த சூர்ப்பண கைக்கு நேர்ந்த அவமானத்தையும் இராவணனுக்குச் சூர்ப்பனகையால் சீதைமீது ஊட்டப் பெற்ற 'காதல் போதை'யையும், அது காரணமாக இராவணன் இராமன் கணையால் மாய்ந்ததையும் நாம் அறிவோம். இராவணனை நினைந்து புலம்பும் வீடணன்,

கொல்லாத மைத்துனனைக் கொன்றாய்என்

றது.குறித்துக் கொடுடிை குழ்ந்து

பல்லாலே இதழ்.அதுக்கும் கொடும்பாவி

நெடும்பாரப் பழிதீர்ந் தாளோ 86ر

என்று வாய்விட்டு அரற்றுவதில் சூர்ப்பனகையின் நனவிலியுளத்தின் போக்கினை வெளிப்படுத்துவதாகக்

66. யுத்த இராவணன் வதை - 225