பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

நிலையைக் கண்டு இராமன் வெம்பி மனம் முறிந்து பூமியில் மூர்ச்சித்து உயிரொடுங்கிக் கிடக்கின்றான். சிறிது நேரத்தில் இராமனுக்கு உணர்வு வருகின்றது. தம்பி மாண்டு விட்டதாகக் கருதி பல படியாகக் கருதி பலபடியாகப் புலம்பி மீண்டும் மூர்ச்சையாகி விழுகின்றான். இராமனது நிலையைக் கண்டு தேவர்கள் போர்க்களம் வருகின்றனர்; இராமனது உண்மையுணர்த்தி அன்போடு அவனது உண்மை சொரூபத்தை எடுத்துக் கூறுகின்றனர் ஏழு பாடல்களால்" இவற்றுள் ஒரு பாடலைக் காட்டுவேன்.

துன்ப விளையாட்டு) இதுவேயும்.

உன்னைத் துன்பம் துடர்பின்மை இன்ப விளையாட் டாம்எனினும்

அறியா தேமுக் கிடருற்றால் அன்பு விளையும் அருள்விளையும்

அறிவு விளையும் அவையெல்லாம் முன்பு பின்பு நடுவில்லாய்

முடித்தா லன்றிமுடியா முடியாமலே (227)

"முன் பின் நடு இல்லாமல் எப்போதும் இருப்பவனே ! உன்னைத் துன்பம் தொடர்தல் இல்லாமையால் நீ துன்புற்றாய் போலவும் இன்புற்றாய் போலவும் விளையாடுகின்ற நின் செயல் துன்ப விளையாட்டோடு என்றாலும், தோற்றமேயன்றி உண்மையை அறியமாட்டாத எங்கட்கு நீ இடருற்றாய் என்றால் உன்பக்கம் அன்பு தோன்றும்; இரக்கமும் தோன்றும்; துன்ப உணர்ச்சி தோன்றும். இவையெல்லாம் நீ போக்கி வைத்தாலன்றி நம்மாற் போக்கமுடியாது. அஃது உன் திருவிளையாடலில் எமக்குத் தோன்றும் இடர் உன்னாலேயே போக்கவல்லது" என்கின்றனர்.

12. யுத்த - பிரம்மாத் - 223-229