பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

தருக்கினர். அதனால் அவர்கள் இவனை இகழ்ந்து கூறிய

தும் நெடுஞ்செழியனின் சினத்தீ கிளர்ந்தெழுந்து உடனே

படையுடன் போருக்கெழும் நிலையில் இச்செழியன்

நெடுமொழிகள் சில கூறலுற்றான்.

இளையன் இவன்என உளையக் கூறுநர் சிறுசொல் சொல்லிய சினங்கெழுவேந்தரை அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு ஒருங்கப் படேன் னாயின் பொருந்திய என்நிழல் வாழ்நர் செந்நிழல் காணாது கொடியன்எம் இறைஎனக் கண்ணிர் பரப்பிக் குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவ னாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகளின் நிலவரை புரப்போர் புன்கண் கூர

  • ^$. __: 伞 :ש §§ இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே

இதில் இவன் கூறிய நெடுமொழிகள்: () எம் இறைவன் கொடியவன் என்று கண்ணிர் பரப்பிக் குடி பழிதூற்றும் கோலேன் ஆகுக. (2) மாங்குடிமருதன் போன்ற புலவர்கள் பாடும் புகழ் பெறாது ஒழிக. என் நாடு (3) என்னால் புரக்கப்பெறும் கேளிர் துயரம் மிக, இரப்பவர்க்கு ஈயமுடியாத வறுமையை யான் அடைக என்பவையாகும். இந்த மூன்றும் ஒரு வேந்தனைக் கீழ்மைப் படுத்துவன என்னும் உணர்வு இவன் உள்ளத்தே ஊறி நிற்பதைக்

శTహౌT:UTt.

சேரன் தம்பி இசைத்த சிலப்பதிகாரத்திலும் வஞ்சினம் பற்றிய குறிப்பு ஒன்று உண்டு. இமயத்திலிருந்து 69. புறம் - 72