பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் 9 153

போந்த முனிவர்கள் ஆரிய அரசர்களாகிய கனகனும் விசயனும் தமிழரசர்களை இகழ்ந்தனர் எனக் கேட்டவன் செங்குட்டுவன். பத்தினிக் கடவுளின் உருச் செய்யும் சிலையினை இமயத்தில் எடுத்து அதனை அவ்வரசர்களின் முடியிலேற்றிக் கொணர்வதாக வஞ்சினம் கூறுகின்றான்.

இமயத் தாபதர் எமக்கீங்கு உணர்த்திய அமையா வாழ்க்கை அரசர் வாய்மொழி நம்பால் ஒழிகுவ தாயின் ஆங்கஃது எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம் வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலைக் கடவுள் எழுதஓர் கற்கொண் டல்லது வறிது மீளும்என் வாய்வா ளாகில் செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப் பகையரசு நடுங்காது பயங்கெழு வைப்பிற் குடிநடுக் குறுஉங் கோலேன் ஆகுக"

என்ற அடிகளால் இதனை அறியலாம். பெரும்பாலும் இச்சூளுரைகள் போர்பற்றியே வருதலையும் காணலாம்.

கம்பன் காவியத்தில் இவை வரும் இடங்களைக் காண்போம். இரண்டு இடங்கள் காணப்பெறுகின்றன.

(1) அநுமன்-இராவணன் வீரவாதங்கள்: முதற்போர்

|7 For", a - همسر படலத்தில் இவை நிகழ்கின்றன

அநுமன்: இராவணனை நோக்கிப் பேசுவது. "மூன்று உலகத்தையும் வென்றாய். இந்திரனுடைய புகழை ஒழித்தாய். இவ்வளவு மேம்பாட்டுடன் இருப்பினும் இன்றைக்கு உனக்கு அழிவு நேரும்" என்று கூறி இராவணன் எதிரே உலகளந்த திரிவிக்கிரமமூர்த்தி போல் வளர்ந்து நிற்கின்றான் அநுமன். 70. சிலப். கால்கோட் - அடி 9-18 71. யுத்த. முதற்போர் புரி - 161-189