பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் 155

வெல்லவல்லை அல்லையாயினும் என்னோடு எதிர்த்து நின்று பொருததனாலாகிய உன்னுடைய புகழ் உலகுள்ளவளவும் நிலைத்து நிற்கும்".

மேலும் கூறுவான்: 'பெருமையுடையவனே, தன்னந்தனியாக உள்ளநீ, எந்தவித ஆயுதமுமின்றி, என் சுற்றத்தைக் கொன்றாய். மிகக் கொடிய வில்லையும், வலிய சேனையுடன் உயர்ந்த தேரின்மீது இருக்கும் என் எதிரில் மிக்க வலிமையுடன் குத்துச் சண்டைக்கு நிற்கின்றாய். இத்தகைய நின்னுடன் ஒப்பானவர்கள் உலகில் யாவர் உளர்?' 'மூன்று உலகிலும் உள்ள முத்தேவர் முதலானோரில் பித்தேறினவர்கள் அன்றி எத்தேவர்கள் அல்லது எத்தானவர் போரில் எனக்கு எதிராக நிற்பார்கள்? அவ்வாறிருக்க நின்ற இடத்தினின்று சலியாமல் மார்பில் குத்து என்று இயம்பி என் எதிரில் நிற்கின்றாய். இங்ங்னம் கூறும் நின் துணிவு சொல்லும் தரமன்று.”

“எனக்கோ போர் செய்வதற்கு இருபது கைகள் உள்ளன; புகழும் பெரிதாக உண்டு. நீ இரண்டே கைகளை உடையவன். என் எதிரில் 'நான் குத்துகிறேன்; தாங்குவாயானால் என்னைக் குத்து' என்று துணிவுடன் சொன்னாய், ஓர் அற்புக் குரங்கு இராவணனாகிய என் எதிரே நின்று சொல்லும் நிலை ஏற்பட்ட பிறகு வேறு என்ன வெற்றி உள்ளது? நான் போர் புரிவதும் தக்கதன்று”. "இப்படிப்பட்ட பழி எனக்கு உன்னால் நேர்ந்ததைக் காட்டிலும் வேறு பழியுள்ளதோ? என் உயிர் போன்ற அட்சயகுமாரனைக் கொன்றாய். அப்போது பெருக் கெடுத்த குருதியின் ஈரம் இன்னும் உலரவில்லை. ஒப்பற்ற நீ என் எதிரே நின்று இந்தச் சொற்களை கூறுகின்றாய்?” "இங்கனம் பழி எனக்கு நேர்ந்ததனால் சபதம் செய்து இவற்றைச் சொன்னாய். இவ்வாறு கூறுவது இயல்பேயாகும். காலம் தாழ்ந்து விட்டது. நானோ பழியால்