பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரம்பொருள் ஏற்றம்

திருப்பாற் கடலைக் கடைந்து தேவர்கட்கு அமுதம் ஈந்தவன் திருமால், அந்தத் திருமாலிடம் இணையற்ற பக்தி கொண்ட கம்ப நாடன் அவன் அவதாரமாகிய இராமனின் காதையை விருத்தம் எனும் ஒண்டாவில் அமைத்து மானிடர்களாகிய நமக்குத் தமிழ் அமிழ்தம் ஈந்து மிகுபுகழ் பெற்றான். துறக்க நீக்கம் (Paradise Lost) என்ற காவியத்தைப் படைப்பதற்கு முன்னர் மில்ட்டன் என்ற ஆங்கிலக் கவிஞன் இருநூற்றுக்கு மேற்பட்ட தலைப்பு களைத் தேர்ந்தெடுத்து அவை யாவும் தான் குறிக்கோளாகக் கொண்ட காவியத்திற்குச் சிறிதும் பொருந்தவில்லை என்று கருதி அவையனைத்தையும் நீக்கிவிட்டு மனிதனின் வீழ்ச்சி' (the fall of man) என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்து அதனைத் தன் காவியப் பொருளாகக் கொண்டு துறக்க நீக்கத்தை நிறைவு செய்ததாக ஆங்கில இலக்கிய வரலாறு கூறும். ஆனால் எந்தவித சிரமமுமின்றி நடையின் நின்றுயர் நாயகன் திருக் கதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதனைக் காவியமாக்கியது தமிழர்களின் தவப் பயன் என்று கருதலாம். பரம்பொருளே இராமனாக வந்தது என்பது அவதார இரகசியம். இந்தத் திருக்காவியம் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டல் திருவரங்கநாதன்