பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

சந்நிதியில் அரங்கேற்றப்பட்டதாகத் தமிழ் இலக்கிய வரலாறு கூறும்.

கம்பநாடன் பேரறிவு பெற்ற பெருங்கவிஞன். ஆதலால் அவன் தான் கண்ட தத்துவ தரிசனங்களை யெல்லாம் நன்றாக வடித்தெடுத்த சொற்களால் கவிதைகளாகப் புனைந்து நமக்குத் தருகின்றான்; சிறந்த வாழ்க்கைத் தத்துவங்களையும் உணர்த்துகின்றான். "மெய்யறிவு பெற்றிருந்தால்தான் சிறந்த கவிஞனாகத் திகழ முடியும்" என்று கோலரிட்ஜ் என்ற ஆங்கில அறிஞன் கூறுவான். இதனைக் கம்பன் பிரகலாதன் வாய்மொழியாக

“கவிகளாகுவர் காண்பவர் மெய்ப்பொருள்"

என்று கூறியிருத்தல் ஈண்டுச் சிந்தித்தற்குரியது. ஒரு கவிஞனுடைய மதிப்பை அவன் நம்மிடையே உண்டாக்கும் மனப்பான்மையைக் கொண்டே எடைபோட முடியும் என்று எமர்சன் என்ற அறிஞரும் கூறுவார். கம்பன்தான் இயற்றிய காவியத்தில் இராமனைப் பரம்பொருளாகவே கருதுவான். இக்கருத்தினை அவன் பல இடங்களில் தன் கூற்றாகவும், பிற கதைமாந்தர்களின் வாய்மொழியாகவும் காட்டுவான்.

கவிஞன் கூற்று திரு அவதாரப் படலத்தில்,

ஒருபகல் உலகெலாம் உதரத்து உட்பொதிந்து அருமறைக் குணர்வரும், அவனை அஞ்சனக்

1. No man was ever a great poet without being at the same time a profound philosopher - Goleridge.

2. யுத்த. இரணியன் வதை - 32 3. The great poets are judged by the frame of mind they induce in us – Ernerson.