பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 9

(3) மாயா சீதையை வாளால் வெட்டிப் போக்குக் காட்டிய இந்திரசித்து தவறாமல் வெற்றி பெற வேண்டும் என்ற கருத்தினால் நிகும்பலை என்ற இடத்தில் வேள்வி இயற்றுகின்றான். இச்செய்தியை வீடணனால் அறிந்த இராமன் வீடணனோடும் வான்ர சேனையுடனும் இலக்குவனை அனுப்பிப் பொரச் செய்து வேள்வியை முற்றுவிக்க வொட்டாது தடுக்கச் செய்கின்றான். கடுமையான போர் நடைபெறுகின்றது. இந்திரசித்து மலரவன் கணையைத் தொடுக்க இலக்குவனும் எவர்கக்கும் தீங்கு விளைக்காது அரக்கன் விடுத்த கணையை மட்டிலும் ஒழிக்குமாறு மலரவன் கணையைத் தொடுக்கின்றான். அரக்கன் விடுத்த கணையினை யொழித்து எங்கும் பரவி நிற்கின்றது. தேவர்கள் இலக்குவனது நற்குணத்தை வியந்து பாராட்டுகின்றனர். சிவபெருமான் இராம இலக்குமணர் களின் பெருமையைத் தேவர்கட்கு உரைக்கின்றார். சிவபெருமான் வாக்காக நான்கு பாடல்கள் உள்ளன 3 ஒரு பாடலைக் காட்டுவேன்.

நாராயண நரர்என்றிவர்

உளராய் நமக்கெல்லாம் வேராய்முழு முதற்காரணப்

பொருளாய்வினை கடந்தோர் ஆராயினும் தெரியாததோர்

நெடுமாயையின் அகத்தார், பாராயண மறைநான்கையும்

நடந்தார்இவர் பழையோர் (41) இராமலட்சுமணர் நாராயணன் நரன் என்று இருவராய் உள்ளவர்கள். நமக்கெல்லாம் மூல காரணமாக இருப்பவர்கள். இவ்வண்டங்கட்கெல்லாம் முழுமுதற்

13. யுத்த. நிகும்பலை - 141-144