பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரம்பொருள் ஏற்றம் 165

என்பது தோன்றுவதை அறியலாம். பூதம் என்ற சொல்லாற்றலால் விநோதமாகக் காட்டப்பெறும் சடைபூதங்களிலும் புகுந்த மனிதனே அவற்றைத் தாங்கிச் செலுத்துதல் போல, ஐம் பெரும்பூதங்களினும் உறைகின்ற நீயே அவற்றைத் தாங்குகின்றாய் என்பது தோன்றுவதைக் காணலாம். பூதங்கள் தோறும் உறைந்தால் என்றதனால் அந்தர்யாமித்துவம் தோன்றுதலும், அவை உன்னைப் பொறுக்குமோ என்றதனால் அனைத்திற்கும் ஆதார மாதலும் சர்வசக்தித்துவமும் தெரிவிக்கப் பெற்றன என்பதையும் அறியமுடிகின்றது.

ஆகவே, இப்பாடலால் பரம்பொருளின் ( வியூக நிலை, (2) வியாபகத்துவம், (3) அந்தர்யாமித்துவம், ( ஆதார-ஆதேய நிலை (நவவிதசம்பந்தங்களுள் ஒன்று (5) பிரளய காலத்தில் பெருங்கடலில் ஆலிலையில் கண்வளர்தல் ஆகிய தன்மைகள் காட்டப்பெற்றுள்ளன என்பதனை அறிய முடிகின்றது.

இந்திரன்: விராதனது சாபம் தீர்த்த பின்னர் இராமன் சரபங்கன்து" ஆசிரமத்தருகில் சென்ற போது நான்முகன் கட்டளையால் அம்முனிவனைச் சத்தியலோகம் அழைத்துச் செல்ல இந்திரன் வந்திருந்தான். அவன் இராமனைக் கண்டு ஐந்து பாடல்களால் துதித்துச் செல்லு கின்றான்". இத்துதிப்பாடல்களில் இந்திரன் வாக்காக இராமன் பரம்பொருள் என்று காட்டப் பெறுகின்றான்.

இவற்றுள் ஒரு பாடலைக் காட்டுவேன்:

தோய்ந்தும் பொருளனைத்தும் தோயாது நின்ற

கடரே தொடக்கறுத்தோர் சுற்றமே பற்றி,

13. சாபங்கன் - என்பதற்கு 'மன்மத) பானங்களைப் பங்கப் படுத்தினவன்' என்பது பொருள். காமத்தை யொழிந்தவன் என்பது கருத்து

14. உசரபங்கன் பிறப்பு நீங்கு - 27-31.