பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

நீந்த அரிய நெடுங்கருணைக் கெல்லா

நிலையமே வேத நெறிமுறையின் நேடி ஆய்ந்த உணர்வின் உணர்வே! பகையால்

அலைப்புண்டு அடியேம் அடிபோற்ற அந்நாள் ஈந்த வரம்உதவ எய்தினையே! எந்தாய்! 15

இருநிலத்த வோநின் இணையடித் தாமரையாம் தோய்ந்தும் - கரந்தும்; சுடர் - சோதி உரு தொடக்கு - பற்றுகள், நேடி - தேடி உணர்வே - அறியாப்பரம் பொருளே, எய்தினையே - எழுந்தருளினையே) இதில் ஆழங்கால் படுவோம்.

எல்லாப் பொருள்களிலும் அந்தர்யாமியாய் எம் பெருமான் கலந்திருத்தலால் தோய்ந்தும் பொருள னைத்தும் என்கின்றான். அங்ங்ணம் கலந்திருக்கும்போதும் அந்தப் பொருள்களின் குணங்கள், குற்றங்கள் எம்பெருமானைத் தொடுவதில்லை. சித்து (உயிர்), அசித்து (உடல்) இவை இரண்டினுள்ளும் அந்தர்யாமிய ய்

உள்ளான் இறைவன். உலகிலுள்ள எல்லாப பொருள்களிலும் இப்படித் தோய்ந்தே உள்ளான். எப்படி உள்ளான்? - உடல் மிசை உயிர் எனக் கரந்துள்ளான்'

(திருவாய் 1-1 என்று ஆழ்வார் கூறுவது போல். நம் உள்ளத்தில் எம்பெருமான் இருப்பினும் நாம் செய்யும் நல்வினை தீவினைகள் அவனுடன் சம்பந்தப்படுவதில்லை. “கர்மங்கள் என்னைத் தீண்டோ" என்பது கண்ணன் கூற்று. முற்றத் துறந்த முனிவர்களின் சுற்றமாக இருப்பவன். இதனைத் தொடக்கறுத்தோர் சுற்றமே என்று குறிப்பிடுகின்றான். எம்பெருமான் கருணை வடிவானவன்; கருணாகரன்; கருணாநிதி; இதனைக் கருத்தில் கொண்டு நெடுங்கருணைக்கெல்லாம் நிலையமே என்கின்றான். எம்

15. ஆரணிய - சாபங்கன் பிறப்பு - 27 16. கீதை 4:14