பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரம்பொருள் ஏற்றம் 167

பெருமான் தத்துவ ஞானத்தால் அறியப்படுவானாதலால் 'நேர்ந்த நெறிமுறையின் நேடி, ஆய்ந்த உணர்வின் உணர்வே' என்கின்றான். எம்பெருமானுக்கும் (பரமான்மா) சீவான்மாவுக்கும் சொல்லப்பெறும் உறவுகளில் "தந்தை-தனயன் உறவு' ஒன்றாதலால் எந்தாய்' என்கின்றான். தேவர்கள் மேரு மலையிலிருந்து திருப்பாற்கடலில் திருப்பள்ளி கொண்டிருக்கும் பரமனைப் பிரார்த்தித்த காலத்தை நினைந்து அந்நாள் என்கின்றான். "தசரதன் மதலையாய் வருதும்', 'வருந்தல் வஞ்சகர்தந்தலை அறுத்து இடர்தணிப்பேன்’ என்பன போன்ற உறுதி மொழிகளை நினைந்து தந்த வரம் உதவ எய்தினையே’ என்கின்றான். நின்னுடைய இணைத்தாமரை அடிகள் அரிய நிலத்தில் பொறுக்கத் தக்கனவோ?’ என்று இரங்கிப் போற்றுகின்றான். இப்பாடல்களால் எம்பெருமானின் அந்தர்யாமித்துவம், எம்பெருமான் தத்துவ ஞானத்தால் அறியப்படுபவன், ஆன்மாக்களின் வேண்டுகோளின் படி அல்லல்களைத் தீர்க்கும் பொருட்டு அவதாரம் எடுப்பவன் என்ற பரம்பொருளின் தன்மைகள் காட்டப்பெறுகின்றன.

கவந்தன். அயோமுகி"யினின்றும் விடுபட்ட பிறகு இராமலக்குமணர்கள் கவந்தன்" இருக்கும் வனத்தை அடையும்போது கவந்தன் தனது வழக்கப்படி இரண்டு புயங்களையும் நீட்டி, எல்லாப் பிராணிகளையும் வாரித்

17. அயோமுகி - ஒர் அரக்கி, இராமனுக்குத் தண்ணீர் கொண்டு வரச் சென்ற இலக்குவன்மேல் காதல் கொண்டு அப் பெருமானை மயக்கி வலியத் தூக்கிச் செல்லலானாள். மோகம் நீக்கிய இலக்குவன் அவளுடைய மூக்கைத் துணித்து அவளை அகற்றி மீண்டு இராமனை அடைந்தான். 18. கவந்தன் : வயிற்றுக்குள் தலை அடங்கினமைபற்றிக் கவந்தம் போல் தோற்றம் உடையவனாயிருந்தமையால் கவந்தன்' எனப் பெயர் பெற்றான். 'கவந்தம் என்ற சொல்லுக்குத் தலையற்றதும் தொழிலுடன் கூடியதுமான உடல் என்பது பொருள்.