பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரம்பொருள் ஏற்றம் , 189

வேர்முதலாய் வித்துஆய்ப் பரந்து தனிநின்ற கார்முகில் வண்ணன் (திருவாய் 2.8:10) என்ற ஆழ்வார் பாசுரங்களை நினைந்து இந்த உண்மையினைத் தெளியலாம். எல்லாம் அழியும் பிரளய காலத்தில் பொங்கிய உலகங்களை மூடிக் கொள்ளும் அந்தப் பிரளயப் பெருங்கடலில் ஓர் ஆலமரம் தோன்றும்; அந்த ஆலமரத்தின் ஓர் இலையின்மீது எம்பெருமான் ஒருவனே சராசரங்களையெல்லாம் ஊறு படாமல் தனது திருவயிற்றில் அடக்கி வைத்துக் கொண்டு ஒரு சிறு குழந்தை வடிவத்துடன் படுத்து யோக நித்திரை-அறிதுயில்-செய்து வருகின்றனன் என்பது நூற்கொள்கை

எவரும் யாவையும் எல்லாப் பொருளும் கவர்வுஇன்றித் தன்னுள் ஒடுங்க நின்ற பவர்கொள் ஞான வெள்ளச் சுடர்மூர்த்தி (2.2:1) பாலனாய் ஏழ்உலகு உண்டு பரிவுஇன்றி ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணலார் (4.2.11 என்ற ஆழ்வார் பாசுரங்களும்,

பாலன்.தனது உருவாய்

ஏழ்உலகுஉண்டு ஆல்இலையின் மேல்அன்று நீவளர்ந்த

மெய்என்பர் முத. திருவந். 68) என்ற பொய்கையாழ்வார் வாக்கும் இக்கருத்தினை அரண் செய்கின்றன. -

வாலி: இராமன் தன்னைக் கொன்றது சரியே என்று சமாதானம் அடைந்து தனது குற்றங்களைப் பொறுத் தருளுமாறு இராமனை வேண்டுகின்றான். தீயன பொறுதிதி என்றான்

சிறியன சிந்தி யாதான்."

21. கிட்கிந்தை - வாலி வதை - 19