பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரம்பொருள் ஏற்றம் 8 171

வெற்றரசு எய்தி எம்பி

வீட்டரசு எனக்கு விட்டான் (126).

என்று கூறியவற்றால் இராமனது பரத்துவம் அறுதியிடப் பெறுகின்றது.

மரணப் படுக்கையிலிருந்து கொண்டு வாலி சுக்கிரீவனுக்கு உறுதிப்பொருள் உரைக்கும் போக்கில் இராமன்தான் பரம்பொருள் என்று கூறுகின்றான்;

மறைகளும் முனிவர் யாரும்

மலர்மிசை அயனும் மற்றைத் துறைகளின் முடிவும் சொல்லும்

துணிபொருள் துணிவால் தூக்கி அறைகழல் இராமன் ஆகி

அறநெறி நிறுத்த வந்தது இறையொரு சங்ஆ இன்றி

எண்ணுதி. (மறைகள் - வேதங்கள்; துறைகள் - சாத்திரங்கள்; முடிவு - சித்தாந்தம்; துணிபொருள் - தேர்ந்த

பொருளாகிய பரப்பிரம்மம்) என்று இராமனது பரத்துவத்தைப்பற்றி உணர்த்துகின்றான். தொடர்ந்து, "அழியாமல் எந்நாளும் நிலை நிற்கின்ற முக்திச் செல்வதை அமைய விரும்பி அதற்குரிய நெறி நிந்கின்ற முமுட்சுகளான ஆன்மாக்கள் யாவும் இவன் திருநாமத்தை செபிக்கின்றன; இவனைத் தியானிக்கின்றன. இதனை நீ உணர்வாய். சாமானியமாக இவனிடத்திலுள்ள சிறப்பை நோக்கினாலும், அதற்கு என்னைக் கொன்றிட்ட இந்த வலிமையே சான்றாகும். இதனைக் காட்டிலும் மேலான சான்று ஒன்றும் வேண்டா' ' என்றும்,

23. கிட்கிந்தை - வாலி வதை - 132 24. மேற்படி - 133