பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

கடையிலா மறையின் கண்ணும் ஆரணங் காட்ட மாட்டா

அறிவினுக்கு அறிவும் அன்னோன் போர்அணங்கு இடங்கர் கவ்வப்

பொதுநின்ற முதலே என்ற வாரணம் காக்க வந்தான் + அமரரைக் காக்க வந்தான்." (மறை - வேதம்; ஆரணம் - உபநிடதம்; அணங்கு - வருத்தத்தைச் செய்யும்; இடங்கர் - முதலை; வாரணம் - யானை) என்று கூறுவான். முதலையின் பிடியிலிருந்து கசேந்தராழ்வானைக் காத்த திருமால் இராமனாக அவதரித்துள்ளான் என்று இனங் காட்டுகின்றான். முத்தாய்ப்பாக,

மூலமும் நடுவும் ஈறும்

இல்லதோர் மும்மைத் தாய காலமும் கணக்கும் நீத்த

காரணன் கைவில் ஏந்திச் சூலமும் திகிரி சங்கும்

கரகமும் துறந்து தொல்லை ஆலமும் மலரும் வெள்ளிப்

பொருப்புவிட்டு அயோத்தி வந்தான்ஃ (மூலம் - முதல்; ஈறு - இறுதி; கணக்கு - எல்லை; காரணன் - முழுமுதற் கடவுள்; ஆலம் - தாமரை. பொருப்பு - கைலைமலை) என்று காரணங்களுடன் இராமனை பரம்பொருள் என உறுதிப்படுத்துவான் மாருதி,

31. மேற்படி - 79 32. மேற்படி - 80