பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரம்பொருள் ஏற்றம் , 175

அங்கதன். அங்கதன் தூது சென்றபோது, தான் இன்னார் தூதன் என்று சொல்லும் பாங்கில் இராமனே பரம்பொருள் என்ற கருத்தை வெளியிடுகின்றான்.

பூதநாயகன் நீர்சூழ்ந்த புவிக்கு

நாயகன் இப்பூமேல் சீதைநாயகன் வேறுள்ள தெய்வ

நாயகன் நீசெப்பும் வேத நாயகன் மேல்நின்ற

விதிக்கு நாயகன்."

என்ற பாடலில் இதனைக் கண்டு மகிழலாம்.

இராவணன் பிறர் கண் பார்ப்பதற்குமுன் செல்லும்படி விரைந்து விடுத்துள்ளதுமாகிய இராவணன் விடுத்த சூலத்தை இராமன் பார்த்தான். அந்தச் சூலம் மூன்று நெருப்புகளும் அஞ்சுமாறு திரிகின்றது. அது கண்டு தேவர்கள் ஓடுகின்றனர்; வானரர் முதலிய ஏனையோரின் கூட்டமும் ஒடுகின்றது. நிலை கெடுகின்ற எல்லா உலகத்திலும் தன் ஒளியைப் பரப்பிக் கொண்டு விரிந்து நிற்கின்றது.

இராமன் விடுத்த வெய்ய சரங்கள் யாவும் பயன்படாது ஒழிகின்றன. தேவர்களுடைய திண்ணிய படைகளையெல்லாம் விடாது எய்கின்றான். அவை யாவும் அச்சூலத்தை ஒன்றும் செய்யமாட்டாது சிந்தின. இராமன், அந்தச் சூலத்தின் வலிமையைக் கண்டு ஒன்றையும் அறியாதவனாய் வாளா நிற்கின்றான். அஃது இராமனது மார்புக்கு நேராகப் புகுந்த நிலையில் இராமனது மிக்க சினத்தினால் தோன்றிய பெரிய உங்காரத்தினால் பலநூறு பொடிகளாகிச் சிந்தியது. -

தான் விட்ட சூலம் இராமன் இறந்தால் ஒழிய அவனைவிட்டுப் போகாது என்று கருதியிருந்தான்

33. யுத்த. அங்கதன் துது - 21