பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

இராவணன். ஆயினும், இராமனது உங்காரத்தினால் அது பொடிப்பொடியாகிப் பிதிர்ந்து உதிர்ந்து போதலைக் கண்கூடாகக் கண்டான். இவன் நம்மைத் திண்ணமாக வென்றவனேயாவான்' என்று கருதி மனத்தில் அச்சத்தினால் வியர்த்தான். அப்போது வீடணனது சொல்லை நினைக்கலுற்றான்.

சிவனோ அல்லன்; நான்முகன்

அல்லன்; திருமாலாம் அவனோ அல்லன், மெய்வரம்

எல்லாம் அடுகின்றான்; அவனோ என்னில் செய்து

முடிக்கும் தரனல்லன்; இவனோ தான்.அவ் வேத 34

முதற்கா ரணன் என்றான் இவ்வாறு ஒரு நிமிட நேரம் இவன் பரம்பொருள்தானோ என்று நினைத்தான்.

ஒரு நிமிட நேரம் அடங்கியிருந்த ஆணவம் (மலம்) தலை தூக்கிவிட்டது; பேருருவம் எடுத்து விடுகின்றது.

யாரே னுந்தான் ஆகுக!

யான்என் தனிஆண்மை பேரேன் இன்றே வென்றி

முடிப்பேன்; பெயர்கில்லேன்." என்று போரில் இறங்கி விடுகின்றான்.

இங்கனம் இராமன் பரம்பொருள் என்பதை அரக்கர்கள், தேவர்கள், இந்திரன், நித்தியசூரிகள், வானரங்கள் முதலியோர் கூற்றால் பரம்பொருள் காட்சி காட்டப் பெறுகின்றது. ஏன்? இராவணன் கூட ஒரு நிமிட நேரம் இராமன் பரம்பொருள் என்று எண்ணுகிறான்.

34. யுத்த. இராவணன் வதை - 135 35. மேற்படி - 136