பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை ல் 17

வாழ்க்கையிலிருந்து மலர்கின்றது; அது வாழ்க்கைக்கே உரியது: வாழ்வின் பொருட்டே அது நிலை பெற்று நிற்கின்றது’ என்று கூறிப் போந்தார். இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் பெரும்பாலான இலக்கியங்கள் தோன்றியுள்ளன. வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்துப் பல குறிக்கோள் பொருள்களை உணர்த்தியதனால்தான் இலக்கிய ஆசிரியர்கள் என்றும் சிறந்த மேதைகளாகப் பாராட்டப் பெறுகின்றனர். அவர்தம் இலக்கியங்களும் ‘சாவா இலக்கியங்களாகத் (Classics) திகழ்கின்றன.

இதனை நன்குணர்ந்த மாத்யூ ஆர்னால்டு என்ற ஆங்கிலத் திறனாய்வாளரும் இதனால்தான் "இலக்கியம் வாழ்க்கையின் திறனாய்வு; வாழ்க்கையின் குறிக்கோள் பொருள்களைப் பயனுறும் முறைகளில் எடுத்துக் காட்டுவதில்தான் - வையத்தில் வாழ்வாங்கு வாழ்வது எப்படி என்பதை உணர்த்துவதில்தான் - ஓர் இலக்ககிய ஆசிரியனின் திறமை பொலிவுறும்" என்று கூறிப் போந்தார், தனிக்கவிதைகள் சில வாழ்க்கை உண்மைகளை உணர்த்துவதைவிட காவியத்தில் இவ்வுண்மைகளைச் சிறந்த முறையில் உணர்த்துவதற்கு வாய்ப்புகள் அதிகம்,

28 Poetry is made out of life, belongs to life, exists for life—W.H. Hudson.