பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ல் பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

திருமணம் முடிந்து தசரதன் தன் மக்களோடு அயோத்தி திரும்பும்போது பரசுராமன் எதிர்வரும்போது, அவனைக் கண்டு நடுங்குகின்றான். அவனை நோக்கி,

‘இவனும் எனதுயிரும்

உணதப்யம் இனி"

என வேண்டுகின்றான் தயரதன், தனது உயிரினும் சிறந்தவன் இராமன் என்றும், தன் உயிர் உளதாவது இராமன் உளனானபின்பே என்றும் கருத்துகள் விளங்க 'எனதுயிர் என்பதற்கு முன் இவனும் என்கின்றான். இதன்னாலும் தசரனது பிள்ளைப் பாசம் தெளிவாகின்றது.

இராமன் கைகேயியின் அரண்மனையிலிருந்து அவளிடம் விடை பெற்றுக் கொள்கின்றான்.

மின்னொளிர் கானம் இன்றே

போகின்றேன் விடையும் கொண்டேன்’

என்று விடைபெற்றுக் கொண்டு, கோசலையின் இடத்திற்கு வருகின்றான். கைகேயியின் அந்தப்புரத்தில் நடைபெற்ற சதி முதலியவற்றைச் சிறிதும் அறியாள் கோசலை. முடிபுனைந்து கொள்ளும் தன் அருமை மகன் தன்னிடம் ஆசிபெற வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றாள் இப்பெருமாட்டி -

குழைக்கின்ற கவரி இன்றிக்

கொற்றவெண் குடையும் இன்றி

இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம்பின் இரங்கி ஏக

மழைக்குன்றம் அனையான் மெளலி

கவித்தனன் வரும்என்று என்று

4. பாலகா. பரகராமப் - 19, 5. அயோத். கைகேயி சூழ்வினை - 110.