பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பாசம் 21

தழைக்கின்ற உள்ளத் தன்னாள்

முன்ஒரு தமியன் சென்றான்"

என்பது இராமன் வருகையைச் சித்திரிக்கும் பாடல். இப்பாடலில் மழைக்குன்றம் அனையான் மெளலிகவித்தன் வரும் என்பது எதிர்பார்த்து நிற்கும் தாயுள்ளத்தை உணர்த்துகின்றது. என்று என்று என்ற அடுக்குத் தொடரில் பெற்றதாயின் உள்ளம் பலமுறை எண்ணிக் கனவு கண்டிருந்த ஆசையும் ஆவலும் புலனாகின்றன. தழைக்கின்ற உள்ளம் என்ற சொற்றொடரின் பொருள் அன்பால் கிளர்ந்தெழும் தாயுள்ளத்தைக் காட்டுகின்றது; 'தழைக்கின்ற என்பது, இதற்கு முன் எங்குமே கண்டிராத ஒரு புதுப்பொருள் உணர்த்துவதை அறிகின்றோம். 'அன்னாள் என்ற சொல் அத்தாயைத் தொலைவில் நிறுத்திக் காட்டி இறக்கமுறச் செய்கின்றது. காரணம், என்ன நிகழப் போகின்றது என்பதை நாம் அறிவோம். கோசலை அறியமாட்டாள் அன்றோ? மேலும் ஒரு தமியன் என்ற தொடரில் பெரியவிருதுகளுடனும் மக்கள் சுற்றத்துடனும் வாராமல் தனியாக ஒரு பரதேசிபோல் வருவதை' உணர்த்துகின்றது.

தன்னிடம் ஆசி பெறத் தனயன்-பாராளப் போகின்றவன்-வருவான் என்று எதிர்பார்த்திருக்கும் கோசலையின் முன் இராமன் வருகின்றான்; முடிபுனையும் நிலையில் வரவில்லை; சாதாரண நிலையில்தான் வருகின்றான். குழைக்கின்ற கவரியின்றிக் கொற்ற வெண்குடையும் இன்றி வருகின்றான். குழைக்கின்ற கவரி "கொற்றவெண்குடை என்ற அழகிய சொற்றொடர்கள் இராமன் பெறுவதற்கிருந்த பேறுகளை எண்ணி ஏங்கச் செய்கின்றன. இராமனுக்கு முன்னால் ஒருவரும் பின்னால் ஒருவரும் வருவதாகக் காட்டுகின்றான் கவிஞன். இருவரும்

6. அயோத்தி - நகர்நீங்கு - 2