பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

எந்தையே என்பான்; என் உயிரே என்பான்; உனக்கு முந்தினவனான நான் உயிரோடு இருக்கின்றேன் என்பான் (1) இந்திரனது பகை ஒழிந்ததே என்பான்; வானரர்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் ஆரவாரித்தாரே! என்பான்; காந்தை மலர் குடிய கண்ணுதலோனும் பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனும் நிரந்தரமாகப் பகை நீங்கப் பெற்றனரோ? என்பான் (). சாம்பல் பூசிய சங்கரனும் சுதர்சன பாணியான மாலும் நின்னை எதிர்ப்பதினின்றும் நீங்கி முறையே மலையிலும் கடலிலும் மறைந்து நிற்பவர்கள் இனி காளைமீதும் கருடன்மீதும் ஏறிக் கொண்டு உலாவுவார்கள் (12. வானவர்கள் கூட்டமும் அவர்கள் இவர்ந்து செல்லும் ஊர்திகளும் இந்திரசித்துக்குமுன் எதிர்த்து நிற்கமாட்டாமல் தாம் சென்ற திக்குகளிலேயே பதுங்கியுள்ளவை இதுவரையில் தமக்கு உரியனவான இடங்களில் சேரமாட்டாதன வாயின், அவை மீண்டும் சேர்வது கீழான மானுடரின் வெற்றியைக் கொண்டுதானோ?” என்பான் (13. ஒருமனிதன் கொல்ல என்மகன் உயிரொழிந்தனனே! என்பான். பலமுறை மைந்தா! மைந்தா!" என்று குரலிட்டுக் கூப்பிடுவான்; வருந்துவான்; மனம் வெதும்புவான் (14).

அடுத்து, ஏழு கவிகளால் இராவணனுடைய பத்துத் தலைகளும் பலவாறு புலம்புவதைக் காட்டுவான் கவிஞன்

‘ஐயனே! என்று கூறும் ஓர் சிரம்; மற்றோர் சிரம் இன்னும் யான் அரசு செய்வேனோ!' என்னும்; உன்னைப் பகைவர் கையிற்காட்டிக் கொடுத்த அற்பனாகிய யான் உய்வேனோ? என்று உரைக்கும் பிறிதோர் சிரம்.

16. இராவணன் சோகம் - 16-22