பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பாசம் , 29

"சந்தனக் குழம்புகளால் கோலம் எழுதப்பெற்ற இரும்புத்துணையொத்த நின் தோள்களினால் என்னைத் தழுவிக் கொள்ளாமல் இருக்கின்றாயே! என்று ஒருதலை பேசும்; மற்றொரு தலையோ வளப்பமுள்ள வில் வீரனே! புலியேற்றை மான் உண்பது தகுதியோ!" என்று கூவும். நீலகண்டனையும் சக்கரபாணியையும் புறமுதுகுகாட்டி ஒடச் செய்த நீ மீண்டும் உன் குரலைக் காட்டாமல் போனாயோ? என்று கூறும்.

அங்கே ஒரு தலை 'நீ இறந்திட்டாயோ! நான், துணையைப் பிரிந்திட்டேனே! என்று கரையும்; நினக்கு நேர்ந்த விபத்து வஞ்சமோ! என்று கூறும்; இனித் திரும்பி வரமாட்டாயோ!' என்று ஏங்கும்; நான் தன்னந் தனியே கிடந்து அஞ்சினேன்' என்று நெஞ்சு நோவக் கதறும். பின்னும் ஒரு சிரம், இந்திரனுடைய வெற்றி மாலையை அவன் கிரீடத்துடன் நீ பறித்ததனால் உன் அக மகிழ்ச்சிக்காக மகிழ்ச்சி காட்டிய மாதவர் உச்சியாலே வைத்த உன்னுடைய அன்று மலர்ந்த வெற்றி மாலையைக் காகங்களாடுகின்ற போர்க்களத்தில் காண்பேனோ? ( தக்கதோ) என்று கூவும்.

மற்றோர் சிரம், வீரனே சேல்மீனையொத்த கண்களையுடைய இயக்க மனைவியர் உன்னுடைய அழகிய வில்லினொலியைக் கேட்டு நடுங்கித் தம்தாலியைத் தொடு தலை இனிமேல் தவிர்வார்களோ? என்று சொல்லும். அங்கே ஒருதலை, எல்லையில்லாத வல்லமை’ யுடையவனே! எல்லாஉயிரையும் கொள்ளும் காலன் உன் எதிரே வந்து உயிர்கொள்ளுதற்குரிய ஒப்பற்ற வலிமையைத் தான் உடையதன்று; என்னையும் ஒளித்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாயோ?” என்று சொல்லும்.

பின்னர் இராவணன் போர்க்களஞ்சென்று ஒருநாள் முழுதும் தேடி பிணங்களிடையே அவன் உடலைக் கண்டு