பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[3]

சகோதர வாஞ்சை

'உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ்' என்கின்றார் தமிழ் மூதாட்டி ஒளவைப் பெருமாட்டி உடன், வந்தோன் மரித்துவிடில் வாகுவலிபோம் என்கின்றது நீதி வெண்பா' 'தம்பியுடையான் பகையஞ்சான் என்பது நம் நாட்டுப் பழமொழி' இது கம்பர் பெருமானால் தம் நூலிலும் எடுத்தாளப்பெற்றுள்ளது. இராமாயணம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய பல உண்மைகளை மிக நயமாக எடுத்துரைக்கின்றது. கவிதையின் தலைமைப் பண்பு அஃது உணர்த்தும் உண்மையில் தான் உள்ளது. இதனைக் கவிஞன் கூற்றாக அமைக்காமல் பெரும்பாலும் காவிய மாந்தர்களின் வாய்மொழியாகவே வெளியிடுவான். "இவற்றை யெல்லாம் நன்கு உணர்ந்த வடமொழி வாணர்கள் தலைவன் ஏவலாளர்கட்குக் கூறுதல் போன்றவை அறநூல்கள் என்றும், நண்பர்கள் ஒருவர்க் கொருவர் கூறும் முறையில் அமைந்தவை புராணங்கள் என்றும், கணவனுக்கு மனைவி உரைப்பது போன்றவை காவியங்கள் என்றும் ஒருவகைப் பாகுபாடுகள் செய்துள்ளனர்". இத்தகைய உண்மைகளில் ஒன்று 1. நல்வழி - 24. 2. நீதி வெண்பா - 51.

3. யுத்த, இந்திரசித்து வதை - 69. 4. ந. சுப்புரெட்டியார் பாட்டுத்திறன் - பக். 329