பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 ல் பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

இறையேனும் முனிந்திலாதாய், சன்னத்தனாகித் தனுவேந்தற்கு ஏது?" என்று தொடங்கி இருவருக்கும் இடையே நடைபெறும் வாக்குவாதம் பதினான்கு கவிகளால் காட்டப் பெறுகின்றது பாடல்கள் யாவும் படித்து அநுபவிக்கத்தக்கவை. தன் சகோதரவாஞ்சையை, 'சிறந்த தந்தையாவானும் நீயே, ஒப்பற்றதலைவனும் நீயே, பெற்ற தாயாகு வானும் நீயே, எனக்கு வேறு ஒருவரும் இல்லை" என்று கூறிப் புலப்படுத்துகின்றான். பின்னர் சினமும் தணிகின்றது.

இருவரும் சுமித்திரையின் கோயிலை நண்ணு கின்றனர். சுமித்திரையின் உபதேச மொழி இலக்குவணனின் சகோதர வாஞ்சைக்கு முத்தாய்ப்பு வைத்த மாதிரி ஆய்விடு கின்றது. " மகனே, இராமன் செல்லும் காடுதான் அயோத்தி, அந்த இராமனே நினக்கு தயரத மன்னன்; பூங்குழள் சீதையே நினது தாய் என்று கருதியவண்ணம் செல்க இனி இங்கு நிற்பதும் குற்றமாகும்" என்று கூறியவள், "இராமனுக்குப் பின் தம்பி என்று கருத இடந்தராமல் அடியானைப்போல் அவன் ஏவுந் தொழிலைச் செய்க. இராமன் மீண்டு அயோத்திக்கு வந்தால் அவனுடன் வருக அப்படியில்லாமல் போனால் நீ முன்னரே உயிரைத் துறந்துவிடு" என்று பின்னும் உரைக்கின்றாள்.

கானகத்தில் - கங்கைக் கரையில் இராமன் சீதையுடன் நாணல் படுக்கையில் உறங்கும்போது "வரிவில் ஏந்திக், காலைவாய் அளவும் தம்பி (இலக்குவன்) இமைப்பிலன் காத்து நின்றான்" உறக்கம் கண்ணைச் சுழற்றுகின்றது. 14. மேற்படி - 127-140 15. மேற்படி - 137 16. அயோத்தி - கங்கை 50