பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகோதர வாஞ்சை 41

துயிலெனும் அணங்கு வந்து

தோன்றலும் அவளை நாமே எயிலுடை அயோத்தி மூதூர்

எய்துநாள் எய்தும் என்றான்" இலக்குவனனின் இச்செயலை நோக்கும்போது பாரதியின் "கண்ணன்-என் சேவகன்” நினைவிற்கு வருகின்றான்.

பரதனின் சகோதர வாஞ்சை கேகய நாட்டினின்றும் திரும்பிய பரதனிடம் கைகேயி இராமன் தம்பியுடனும் மனைவியுடனும் கானகம் சென்றதைத் தெரிவிக்கின்றாள், பரதனும் இராமனைத் தந்தையாகவும், தாயாகவும் இறைவனுமாகவும் கொண்டவன்

வாக்கினால் வரந்தரக்

கொண்டு மைந்தனைப்

போக்கினேன் வனத்திடைப்;

போக்கிப் பார்உனக்கு

ஆக்கினேன்; அவன் அது

- பொறுக்க லாமையால்

நீக்கினான் தன்.உயிர் நேமிவேந்து"

என்று கூறவும் பரதனுக்கு வெகுளி பொங்கி எழுகின்றது-சகோதர வாஞ்சையின் காரணமாக நான்கு பாடல்களில் பரதனது இவகுளியின் மெய்ப்பாடுகள் சித்திரிக்கப் பெறுகின்றன’ பரதன் கைகேயியைத் தாய் என்று உயிரோடு விட்டான். இவளைக் கொன்றால் இராமன் சினங்கொள்வானே என்று கொல்லாது

17. அயோத்தி - கங்கை 51 18. அயோத்தி - பள்ளிபடை - 58 19. மேற்படி - 65 20. மேற்படி - 66-69