பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

கடுஞ்சொற்களால் இடித்துக் கூறினான். சகோதர வாஞ்சை சினத்தைக் கிளப்பி விடுகின்றது. முன்னர் வசிட்டனிடம் "கைகேயி என் மனைவி அல்லள்; பரதனைப் பிள்ளையென்று நினையேன்; அவன் என் ஈமக்கடன் செய்வதற்கும் உரியனல்லன்" என்று கூறியதனால் சத்துருக்கனனைத் கொண்டு இச்சடங்குகளை நிறைவேற்றி வைக்கின்றான்."

இராமனை மீட்டு வருவதற்காகக் கானகம் சென்ற பரதன் வழியில் ஒரு சோலையில் தங்கியபோது கண்ணிராகிய அருவியில் நீராடுவதும்; காய், கனி, கிழங்குகளை உண்பதும், இராமன் தங்கியிருந்த புழுதியில் அமைந்த புல்லணையில் தங்கியிருப்பதுமான செயல்கள் சகோதரவாஞ்சைக்குச் சான்றுகளாக அமைகின்றன. அங்கிருந்து இராமன் சென்றதுபோல் காலினாலேயே நடந்து செல்கின்றான்.

சேனையோடு வரும் பரதனைத் தொலைவில்

காணும் குகன் அவன்மீது ஐயுறுகின்றான். சுமந்திரன் மூலம் குகனைப்பற்றிக் கேட்டதும் அவனைச் சந்திப்பதற்குப் பரதன் தம்பியுடன் தனியே வருகின்றான். தொலைவி லிருந்த பரதனை எயினர்கோன் காண்கின்றான். பரதனது

தவவேடத்தைக் கண்டு துணுக்குறுகின்றான்.

வற்கலையி னுடையானை

மாசடைந்த மெய்யானை

நற்கலையின மதியென்ன

நகையிழந்த முகத்தானைக்

கற்கனியக் கணிகின்ற

துயரானைக் கண்ணுற்றான்."

1. அயோத்தி - பள்ளிபடை - 132 22. மேற்படி - 139 23. அயோத்தி - குகப்படலம் - 29.