பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

போது தேரில் வீற்றிருக்கும் பாண்டியனின் கிரீடம் கண்ணுக்குத் தட்டுப் படுகின்றது.

குகன்-பரதன் சந்திப்பு நடைபெறுகின்றது.

வந்தெதிரே தொழுதானை

வணங்கினான்; மலரிருந்த அந்தணனும் தலைவணங்கும்

அவனும்அவன் அடிவீழ்ந்தான்; தந்தையினும் களிகூரத்

தழுவினான்; தகவுடையோர் சிந்தையினும் சென்னியினும்

வீற்றிருக்கும் சீர்த்தியான்"

இதனை அற்புதமாகக் காட்டுகின்றான் கவிஞன். மலர் இருந்த அந்தணனும் பிரமனும்,தனை வணங்கும் அவன் என்பது பரதனைக் குறிப்பிடுகின்றது. தகவுடையோர் சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான் என்பது குகனைக் குறிப்பிடுகின்றது. குகன் வேடர்குலத்தவன் வள்ளி பிறந்த குலத்தவன். 'குகன்' என்ற பெயர் முருகனுக்கு உரியது. சைவப் பெயரைத் தாங்கியுள்ள வேடன் இராமபக்தனாக - சிறந்த பாகவதனாக - கருதப் பெறுவது நமக்குப் பெருமகிழ்ச்சியூட்டுகின்றது.

குகப் பெருமான் பரதாழ்வானை வந்த செய்திபற்றி வினவ, -

முழுதுல களித்து தந்தை

முந்தையோர் முறையினின்றும் வழுவினன்; அதனை நீக்க

மன்னனைக் கொணர்வான்"

25. அயோத்தி - குகப் - 32. 26. மேற்படி - 33