பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகோதர வாஞ்சை 45

வந்ததாகப் பதிலிறுக்கின்றான். இதனைச் செவிமடுத்த வேடர்கோன் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்தவனாகி மீண்டும் ஒருமுறை பரதன் திருவடியில் வீழ்ந்து வணங்கி,

தாயுரை கொண்டு தாதை

உதவிய தரணி தன்னைத் தீவினை என்ன நீத்துச்

சிந்தனை முகத்தில் தேக்கிப் போயினை என்ற போழ்து

புகழினோய் ! தன்மை கண்டால் ஆயிரம் இராமர் நின்கேழ்

ஆவரோ தெரிவின் அம்மா"

என்று பரதனைப் புகழ்ந்து ஆயிரம் இராமர்கள் பரதனுக்கு ஒப்பாவரோ?' என்று மதிப்பிடுகின்றான். மேலும், "கதிரவன் ஏனைய சந்திரன் முதலிய ஒளிகளை அடக்குமாப் போலே, புகழ்ப் பெருமையைப் பெற்ற உங்கள் குலத்தோரது புகழ்களையெல்லாம் உன் புகழுக்குள் அடக்கிக் கொண்டாய்” என்று புகழ்கின்றான். இதனால் பரதனது சகோதர வாஞ்சை மேலும் சிறப்புறுகின்றது.

வசிட்டன், தேவர்கள் முதலியோர் அறவுரைப்படி பரதன் பதினான்கு ஆண்டுகள் நந்தியம்பதியிலிருந்து கொண்டு அரசாளவும் அந்தக் காலம் கழிந்தவுடன் இராமன் திரும்பாவிடில் தான் தீயில் புகுந்து இறப்பதாகவும் கூறி அவனது திருவடி நிலைகளைப் பெற்றுத் திரும்புகின்றான் பரதன்.

பதினான்கு ஆண்டுகள் கழிந்தும் இராமன் வராததால் பரதன் சத்துருக்கனனைத் தீயமைக்கும்படி கட்டளையிடுகின்றான். இதனை அறிந்த (கோசலை),

27. அயோத்தி - குகப் - 35.