பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

ஒப்பெழுத ஒண்ணாத கற்புடையாள்

வயிறுபுடைத்து அலமந்து ஏங்கி இப்பொழுதே உலகிறக்கும் யாக்கையினை

முடித்தொழிந்தான் மகனே என்னா வெப்பெழுதி னாலன்ன மெலிவுடையாள்" என்று ஓடி வந்ததாகக் கவிஞன் காட்டுவான். பரதன் திடுக்கிட்டு அவளது பாதங்களை வணங்கினான்; அவளும் பரதனைத் தழுவிப் பிடித்துக் கொண்டு பேசுகின்றாள். தீயில் விழாது தடுத்துக் கூறுதலை ஏழு கவிகளால் தெரிவிக் கின்றான் கவிஞன்." அவற்றில் ஒன்று:

எண்ணில் கோடி இராமர்கள் என்னினும் அண்ணல் நின்னரு ளுக்கருகு ஆவரோ புண்ணி யம்எனும் நின்னுயிர் போயினால் மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ ? (232) என்பது. "இராமன் ஒருவனேயன்றி பல கோடி இராமர்கள் கூடினாலும் பரதனது அன்புக்கு ஒத்தவர் ஆவரோ? ஆகார்" என்கின்றாள். கோசலையின் உரைகல்லில் பரதனது மாற்று உரைத்துக் காட்டப்பெறுகிறது. மேலே காட்டப் பெற்ற குகப் பெருமானது மதிப்பீடு இதனுடன் ஒப்புநோக்கத் தக்கது.

சத்துருக்கனனின் சகோதர வாஞ்சை. இதுகாறும் இலக்குவன், பரதன் இவர்களின் சகோதர வாஞ்சையைக் கண்டோம். இனி சத்துருக்கனனின் சகோதர வாஞ்சையைக் காண்போம். இராமகாதையில் அதிகம் பேசாத கதை மாந்தன் இவன். அப்படிப் பேசினால் அட்சர லட்சம் ஓர் எழுத்து இலட்சம் பெறுவது போல் பேசுவான்.

இராமனைத் திரும்பவும் காட்டிலிருந்து நாட்டுக்கு இட்டுவர சேனையுடன் பரதன் காட்டுக்குப் புறப்படும் 28. புத்த - மீட்சி - 226. 29. புத்த - மீட்சி - 229-235.