பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

பரதன் முதலியோர் குகனொடு படகில் செல்லும் போது ஒருவருக்கொருவர் அறிமுகம் நடைபெறுகின்றது. குகன் கோசலையின் அடியின்மிசை நெடிது வீழ்ந்து அழுகின்றான். கன்றுயிரி காராவின் துயருடைய' கோசலை குகனை யார்? என்று வினவ, பரதன்

'இன்துணைவன் இராகவனுக்கு இலக்குவற்கும்

இளையவர்க்கும் எனக்கும் மூத்தான குன்றனைய திருநெடுந்தோள் குகன்

இந்நின்ற குரிசில் என்ப்ான்” என்று குகனை அறிமுகப்படுத்துகின்றான். உடனே தாயுள்ளம் குகனையும் தன்மகனாக ஏற்றுக்கொண்டு,

நைவீர்அலீர் மைந்தீர் இனித்துயரால்

நாடுஇறந்து காடு நோக்கி மெய்வீரர் பெயர்ந்ததுவும் நலமாயிற்று

ஆமன்றே விலங்கல் திண்டோள் கைவீரக் களிரனைய காளைஇவன் தன்னோடும் கலந்து நீவிர் ஐவிரும் ஒருவீராய் அகலிடத்தை

நெடுங்காலம் அளித்திர்"

என்று வாழ்த்துகின்றது. இக்கூற்றில் தாய்ப் பாசமும் சகோதர வாஞ்சையும் பின்னிக் கிடப்பதைக் காண்கின்றோம்.

கக்கிரீவன் இராமனைச் சரணம் புகுகின்றான். இராமனும் அவனுக்கு அபயம் அளிக்கின்றான்.

உன்றனக் குரிய இன்ப

துன்பங்க ளுள்ள முன்னாள்

37. அயோத்தி - குகப். 66 38. மேற்படி - 67