பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Wł

கரந்து ஒளிரும் உயிரையும் (ஆன்மாவையும், அந்த உயிருக்கு இடமான உள்ளத்தையும் பதப்படுத்துகின்றது.

எனக்கும் கம்பனுக்கும் உள்ள உறவு ஐம்பது ஆண்டுகட்கும் மேற்பட்டது. அந்த உறவுக்குக் காரணமாக இருந்தவர்கள் பலர். அவர்களுள் மிகவும் குறிப்பிடத் தக்கவர்கள் புலவர் உலக ஊழியனார், புலவர் ஜகவீர பாண்டியனார், தேசபக்தர் சா. கணேசன், தமிழ்க்கடல் ராய சொக்கலிங்கம், சீர்திருத்தச் செம்மல் சொ. முருகப்பா, ரசஞ் ஞானி டி.கே.சி, கலெக்டர் தொ.மு. பாஸ்கரத் தொண்டமான், ஜஸ்டிஸ் எஸ். மகராஜன் ஆகியோர். இவர்கள் எல்லோரையும் நினைந்து போற்றுகின்றேன். இந்த உறவு காரணமாக பல்லாண்டுகளாக பல இதழ்கட்குக் கட்டுரைகள் வழங்கியுள்ளேன். சில என்னுடைய பல தொகுப்பு நூல்களில் சேர்ந்துள்ளன. பல கம்பன் படைத்த சிறுபாத்திரங்கள்', 'கம்பனில் மக்கள் குரல் என்று தனித் தொகுப்பு நூல்களாக வெளிவந்துள்ளன. இவையெல்லாம் என் ஆன்ம நிறைவுக்காக ஆற்றிய இலக்கியப் பணி; நான் இதனைத் தெய்வப் பணியாகக் கொள்வேன். 'வண்டமிழ் நூற்க நோற்றேன்', 'தொண்டர்க்கு அமுதுண்ணச் சொல் மாலைகள் சொன்னேன்' 'அவை அடியார்க்கு இன்பமாரியே' என்ற நம்மாழ்வார் கூறி மகிழ்வதைப் போல் என் பணியை நினைந்து நானும் அந்த அமுதவாக்குகளை நினைந்து மகிழ்கின்றேன்.

'வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற முதுமொழிக்கு ஏற்ப, கம்பனுக்கு யான் ஆற்றிய வினையால் (தொண்டால் சென்னைக் கம்பன் கழகம் 'ஏவி.எம். அறக்கட்டளைச் சொற்பொழிவு (1996)' நிகழ்த்துமாறு 'கம்பன் அடி சூடி மூலம் 8.3.96 நாளிட்ட அழைப்புக் கடிதத்தை 14.3.96 அன்று பெற்றேன். அவருக்கும் கழகத்தலைவர் நீதியரசர் மு.மு. இஸ்மாயில் அவர்கட்கும் என் இதயம் தோய்ந்த நன்றி.