பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகோதர வாஞ்சை 53

அகனமர் காதல் ஐய!

நின்னொடும் எழுவ ரானேம் புகலருங் கானம் தந்து

புதல்வரால் பொலிந்தான் உந்தை." தான் தம்பியாக வீடணனை அங்கீகரித்தமையை வற்புறுத்த தசரதனை 'எந்தை' என்னாது உந்தை' என்கின்றான் இராமன்.

வானரர்கள். இவர்களில் வாலி, சுக்கிரீவன் என்னும் இருவர் சகோதரர்கள். இவர்கள் பிறப்பு பற்றி ஒரு சொல். ஒருமுறை நான்முகன் யோகத்திலிருந்தனன். அவன் கண்ணிலிருந்து ஒரு துளி நீர் பூமியில் விழுந்தது. அத்துளி ஓர் ஆண் குரங்காய் மாறியது. அது வனமெங்கும் சுற்றித் திரிந்து பார்வதியார் வனத்திலிருந்த ஒருதடாகத்தில் மூழ்கி ஓர் அழகான பெண் குரங்காக மாறியது. இவளை இந்திரன் புணர்ந்து வாலியையும், சூரியன் புணர்ந்து சுக்கிரீவனையும் பெற்றனர். வாலிக்கு இந்திரன் பிறர் இவனுடன் போர் செய்யின் அவர் பலத்தில் பாதி வரும் என்று ஆசி கூறினான். பெண் குரங்கு நான்முகன் அருளால் மீண்டும் ஆணுரு அடைந்து வாலிக்குப் பட்டம் கட்டியதாக வரலாறு. வாலியும் சுக்கிரீவனும் சகோதரர்கள் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக் காட்டுகளாவர்.

வாலியுடன் மாயாவி என்னும் ஒர் அசுரன் போர் செய்து ஆற்றாமல் ஒரு பிலத்துள் நுழைந்தனன். வாலி தன் இளவலைப் பிலத் துவாரவாயிலில் காவல் வைத்து விட்டு அசுரனைப் பின் தொடர்ந்தனன். இருபத்தெட்டு மாதங்கள் வரை போர்புரிந்து அசுரனைக் கொன்றனன். பிலவாயிலில் காத்திருந்த தம்பி நெடுநாள் ஆனமையால் தமையனை அசுரன் கொன்றிருக்கக் கூடும் என எண்ணிப் பிலவாயிலை அடைத்து வானரங்களின் வேண்டுகோளுக்கிணங்கி

45. மேற்படி - 146