பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகோதர வாஞ்சை 55

இவற்றால் வானர சகோதரர்களின் சகோதர வாஞ்சை எடுத்துக் காட்டப் பெற்றது. இத்தகைய நிலையை இந்த உலகில் சாதாரண அன்றாட நிகழ்ச்சிகளாக நடைபெற்று வருவதை நாம் நேரில் காண்கின்றோம்.

அரக்கர்கள். விசித்திர வசு முனிவர்க்கும் கேகசி என்பாளுக்கும் பிறந்தவர்கள் மூவர், இராவணன் மூத்தவன்; பத்துத் தலைகளையுடையவன். கும்பகருணன் அடுத்த தம்பி, வீடணன் கடைக்குட்டி இராவணன் பஞ்சாக்கினி நடுவிலிருந்து நான்முகனை நோக்கி பத்தாயிரம் ஆண்டுகள் தவம் செய்தனன். ஆயிரம் ஆண்டு முடிந்தபின் தலைகளில் ஒன்றைத் திருகி தீயில் விடுவன். பத்தாம் தலையைத் திருகுகையில் நான்முகன் அவன்முன் தோன்றி தேவர், விஞ்சையர் அவுனர், சித்தர், உரகர் முதலியவர்களால் இறப்பிலாததும் போரில் அற்ற சிரங்களும் கரங்களும் மீண்டும் வளரவும் வரம் தந்தனன். இவன் இராசச குணத்திற்கு எடுத்துக்காட்டு.

கும்பகருணன் நான்முகனை நோக்கி தித்தியத்துவம்' பெற வேண்டித் தவம் செய்தனன். தேவர்கள் அவனால் தமக்கு நேரும் துன்பத்தை நினைந்து நாமகளைத் துதித்து அவன் வாய்தவறி நித்திரைத்துவம் வரம் பெறுமாறு செய்தனர். தமோகுணத்தையுடையவனாயினும் நேர்மை யானவன். சீதையை விட்டுவிடுமாறு தமையனுக்கு அறம் உரைத்தவன். அவன் கேளாமையால் இராமனுடன் போர் புரியவந்தவன். இராமனுடன் வந்து சேருமாறு கேட்க வந்த வீடணனுக்கு நீதி கூறி இராமனிடமே திருப்பி யனுப்பியவன். சிவபெருமானிடம் பெற்ற கவசத்தையும் சூலத்தையும் உடைய இவன் இராமனுடன் கடுமையாகப் போர் புரிந்து இராமனது கணையால் கைகள், கால்கள் அறுப்புண்டு இராமபிரானைத் தன் தம்பியைக் காக்கவும் தன் தலை கருங்கடல் நடுவில் வீழவும் வேண்டிக் கொண்டு