பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

மடிந்தவன். திருமணம் ஆகாதவன். இவன்தாமச குணத்திற்கு எடுத்துக்காட்டு.

வீடணனும் நான் முகனை நோக்கித் தவம் புரிந்து அறஉணர்வு நீங்காதிருக்க வரம் பெற்றவன். சீதாப் பிராட்டியைச் சிறைகொண்டது தவறு என்று தமையனுக்கு அறம் உரைத்தவன். தூதனாக வந்த அதுமனை இராவணன் கொல்லலாகாது என்று அறம் உரைத்துத் தடுத்தவன். இராமனிடம் அடைக்கலம் புகுந்தவன். இலக்குவனால் இலங்காதிபதி என முடி சூட்டப்பெற்றவன். இராமஇராவணப் போரில் பல்வேறு வகையில் உதவியவன். இறந்த இராவணன் பொருட்டு வருத்தமடைந்து அவனுக்கு ஈமக்கடன் செய்து முடித்தவன். இவன் சத்துவ குணத்திற்கு எடுத்துக்காட்டு,

முக்குணங்களும் ஒன்றுக்கொன்று பொருந்தாதவை. அங்ஙனமே இம்மூவர்களிடமும் சகோதர வாஞ்சை அதிகமாககக் காணப்பெறவில்லை. உலகில் நாம் பல நிலைகளைக் காண்கின்றோம். அவற்றை யொட்டியே இந் நிலையும். ஆனால் கும்பகருணன் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்பதை எடுத்துக்காட்டத் தவறவில்லை.

முதற்போரில் இராவணன் தோற்றுவிடுகின்றான்.

வாரணம் பொருத மார்பும்

வரையினை எடுத்த தோளும் நாரத முனிவற்கு ஏற்ப

நயம்பட உரைத்த நாவும் தாரணி மெளலி பத்தும்

சங்கரன் கொடுத்த வாளும் வீரமும் களத்தே போட்டு

வெறுங்கையோடு இலங்கை புக்கான்"

48. யுத்த. கும்பகருணன் வதை - 1