பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகோதர வாஞ்சை 57

மந்திரச் சுற்றத் தாரும்

வாணுதல் சுற்றத்தாரும் தந்திரச் சுற்றத் தாரும்

தனக்கிளை சுற்றத் தாரும் எந்திரப் பொறியி னிற்ப

யாவரும் இன்றித் தானோ சிந்துரக் களிறு கூடம்

o س -- ۴0 -؟ - ..ft 49_* - - گا۔ புக்கெனக் கோயில் சேர்ந்தான் இஃது இராவணது நிலை. மகோதரனின் யோசனைப்படி கும்பகருணனைப் போருக்கு அனுப்ப எண்ணுகின்றான் இராவணன். கும்பகருணனோ சகோதர வாஞ்சையால் சீதையைக் கொண்டு விட்டுவிடுமாறு பணிக்கின்றான் தன் அறவுரை செவிடன் காதில் ஊதிய சங்கொலிபோல் பயன்படாததால் போருக்குப் போய்விடுகின்றான்.

சகோதர வாஞ்சையால் விடணன்,

எந்தைநீ யாயும்நீ எம்முன் நீதவ வந்தனைத் தெய்வம்நீ மற்றும் முற்றுமதி இந்திரப் பெரும்பதம் இழக்கின் றாய்என நொந்தனன் ஆதலின் நுவல்வ தாயினேன்" என்று தொடங்கி பிராட்டியை விட்டு விடுமாறு அறவுரை கூறுகின்றான்” ரணியனின் கதையையும் கூறித் தெருட்டுகின்றான்”, பயன் இல்லை. சினத்துடன்,

பழியினை உணர்ந்துயான் படுக்கி லேன்உனை ஒழிகிலை புகலுதல் ஒல்லை நீங்குதி விழிஎதிர் நிற்றியேல் விளிதி'என்றனன்.” 49. யுத்த. கும்பகருணன் வதை - 5 50. மேற்படி 79-89; மேலும் யுத்த. மந்திரப் படலம் 48-57 51. யுத்த இராவணன் மந்திரப் - 73 52. மேற்படி - 75-99 53. யுத்த. இரணியன் வதை காண்க. 54. யுத்த. வீடணன் அடைக் - 9.