பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

iss இப்போதாவது தவிர்ந்தாரா? இதுகாறும் உன்னை வெதும்பி வந்த மதியம் என்பான் குளிர்ந்தானா?” (224)

"கொல்லுதற்கரிய மைத்துனனை நீ கொன்றாய் என்று கொடுஞ்செயலைச் சூழ்ச்சி செய்து கொண்டு கொடிய பாவியாகிய நம் மருந்தனைய தங்கை சூர்ப்பனகை பழியைத் தீர்த்துக் கொண்டாளோ? ‘அண்ணா, நரகத்தார் துறக்கத்தார் ஆகிய தீயாரும் நல்லாரும் என்ற எல்லோரும் நம்மோடு பகைவரானார்களே. ஆகையால் இப்போது யார் முகத்தில் விழிக்கப் போகின்றாய்?" 225.

“வெற்றித் திருமகளையும் கலைமகளையும் புகழ்மகளையும் தழுவிய கையானது. பொறாமை மிக சிறப்புப் பொருந்திய மகளான திருமகளும் தெய்வத்தன்மை கொண்ட கற்பினாற் புகழ்பெற்றவளான பிராட்டியைத் தழுவுவதற்கு விரும்பி அதனால் உயிரைக் கொடுத்துப் பழியை மேற்கொண்ட காமப் பித்தனே! திசையானை களின் கொம்புகளை முறித்த பருத்த மார்பினால் இப்போது மண்மகளைத் தழுவினாயோ?” (226)

இவ்வாறு வீடணன் புலம்பும்போது நீதிக்காக துறந்த அவனது சகோதர வாஞ்சை மீண்டும் புதுப்பிக்கப் பெறுவதை அறிகின்றோம்.

இந்திரஜித்தனின் சகோதரவாஞ்சை பிராட்டியைத் தேடிச் சென்ற அதுமனால் கிங்கரர்கள், சம்புமாலி, பஞ்சசேனாதிபதிகள் ஆகியோர் ஒருவர் பின்னர் ஒருவராக அழிக்கப் பெறுகினர். அடுத்து, அட்சய குமரனும் (மண்டோதரியின் பிள்ளை, இந்திரசித்தனுக்கு அடுத்த தம்பி) ஒழிகின்றான். இந்திரசித்தனின் நிலை,

தம்பியை உன்னும் தோறும்

தாரைநீர் ததும்பும் கண்ணான்