பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகோதர வாஞ்சை 61

வம்பியல் சிலையை நோக்கி

வாய்மடித்து உருத்து நக்கர்ன்

கொம்பியல் மாய வாழ்க்கைக்

குரங்கினால் குரங்கா ஆற்றல்

எம்பியோ தேய்ந்தான் எந்தை مسير

புகழ்ன்றோ தேய்ந்தது என்றான்."

என்பது மனம் வெம்பிப் பேசும் பேச்சு. ஒரு குரங்கின் ஆற்றலைச் சரிவர அளவிடாது,

சிங்கரர் சம்பு மாலி

கேடிலா ஐவர் என்று.இப் பைங்காழல் அரக்க ரோம்

உடன்சென்ற பகுதிச் சேனை’

ஆகிய அனைவரையும் "கொன்றனை நீயே யன்றோ?” என்று தந்தையைக் குறை கூறுகின்றான். அடுத்து, போர்க் களத்தில் 'தேய்க்கப்பட்ட தன் தம்பியின் உடலை’ப் பிணக்குவியலிடையே காண்கின்றான். கண்டதும் உயிர்களைக் கொல்லும் யமனும், இராவண பயத்தால் உன்னைக் கொல்ல அஞ்சுவன்; மற்று வேறு உலகத் தவர்களான மக்களும் அங்ங்னமே அஞ்சுவார்கள். ஆகவே உன்னைக் கொல்லவல்லவர் எவரும் இல்லை. நீதான் விளையாட்டு வகையால் எங்கட்குப் புலப்படாது ஒளித்துக் கொள்ளுவதற்கு எந்த உலகத்தைச் சேர்ந்தனையோ?” என்று புலம்புகின்றான். இவற்றால் தம்பியின்மீது தான் கொண்ட பாசம் வெளிப்படுகின்ற தல்லவா?

இலக்குவன் நான்முகன் கணையால் அதிகாயனைக் கொன்றொழிக்கின்றான். அட்சயகுமரன் இறந்தது கேட்டு துக்கமடைந்ததுபோல் அதிகாயன் இறந்த செய்தி

58. சுந்தர - பாசப். 5 59. மேற்படி - 10