பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii

அரசர்களுக்குப் பிறகு திருக்கோயில் திருப்பணி, பக்திச் செல்வத்தைப் பரப்புதல், தமிழ் வளர்ச்சி, புலவர்களைப் பாராட்டுதல் இவை போன்ற கைங்கரியங்களைச் செய்து வருபவர்கள் நகரத்தார் சமூகத்தினர் என்பதை நாடு நன்கறியும். அமரர் ஏவி.எம். அவர்களின் நினைவுச் சொற்பொழிவை ஆண்டு தோறும் உற்சாகம் குன்றாது நடத்திவரும் "இவன் தந்தை எந்நோற்றான் கொல்?” என்ற வள்ளுவர் பெருமான் சொல்லுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் திரு. ஏவி.எம். சரவணன் அவர்கட்கு என் இதயம் தோய்ந்த நன்றி என்றும் உரியது.

இந்த இலக்கியப் பணியில் ஈடுபடுத்திய பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டலை'ச் சிந்தையில் நிறுத்தி அமைக்கின்றேன்.

தொண்டே செய்துஎன்றும்

தொழுது வழியொழுகப் பண்டே பரமன்

பணித்த பணிவகையே:

- நம்மாழ்வார்

வேங்கடம்' ந. சுப்புரெட்டியார் ஏடி-13 (மனை எண்.335) அண்ணாநகர்,

சென்னை - 600 040 தொ.பே. 621583 10.7.1996

  • திருவாய். 10.4:6