பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gسسحساححسيسي

| 4 |

மக்கட் பண்புகள்

திருக்குறள் பொருட்பால் ஒழிபியலில்

நன்மக்களின் பண்புகளாக மானம், பெருமை, சான்றாண்மை பண்புடைமை போன்றவற்றை எடுத்துக் காட்டுவார்.

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடும்

ஐந்துசால்பு ஊன்றிய தூண் என்ற குறளில் அன்பு, தாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்ற ஐந்து பண்புகளும் சால்பு என்னும் பாரத்தைத் தாங்கும் தூண்களாகும் என்று குறிப்பிடுவார். இவை போக நன்மக்களின் பண்புகளுக்கு அளவில்லை. பெருங்காப்பியம் படைப்போர் இத்தகைய பண்புகளைக் கதை மாந்தர்களின்மீது ஏற்றிக் கூறுவது உண்டு. இதனால் காவியத்தைப் படிப்போர் இவற்றின் தாக்கத்தைக் கட்டாயம் அடைவர். ஓமியோபதி மருந்துபோல் இவை பயன் தரும் என்று சொல்லலாம். இவை அனைத்தும் மக்கட் பண்புகளாகக் கொள்ளலாமேனும், அன்புடைமையை மட்டிலும் முதலில் கொண்டு விளக்குவேன்.

1. திருக்குறள் - பொருட்பால் - சான்றாண்மை - 3