பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பண்புகள் 65

1. அன்புடைமை அன்புக்கு இலக்கணமாகப் பெரிய புராணத்திலுள்ள காளத்தி வேடன் கண்ணப்பனை எடுத்துக்காட்டுவர் சைவச் சான்றோர். கண்ணப்பன் ஒப்பதோர்

அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்ஒப்பில்

என்னையும் ஆட்கொண்டருளி என்பது மணிவாசகப் பெருமானின் அமுதவாக்கு. அதுபோலவே இராமகாதையில் கங்கைவேடன் குகனை அன்புக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். காளத்தி வேடன் குடுமித் தேவருக்குக் காட்டிய அன்பைப்போல் கங்கைவேடன் இராமபிரானிடம் அன்பு காட்டுகின்றான்.

கங்கைக் கரைக் குகன் ஆயிரம் அம்பிக்கு (மரக்கலம்) நாயகன். இராமனிடத்துப் பெருங் காதல் கொண்டவன். தான் வந்த செய்தியை இலக்குவன்மூலம் தெரிவித்து, இராமனது அனுமதி பெற்று அப்பெருமானைக் காண்கின்றான்.

கண்ணனைக் கண்ணின் நோக்கிக்

களித்தனன்; இருண்ட குஞ்சி மண்ணுறப் பணிந்து மேனி

வளைத்துவ்ாய் புதைத்து நின்றான்." காளத்திவேடன் குடுமித் தேவருக்கு இறைச்சியைப் படைத்ததுபோல, கங்கைவேடன் நின்ற நிலையில் அளவுக்கு அடங்காத அன்புடன் இராமனுக்கு உணவாகும் படி தேனும் மீனும் கொண்டுவந்து காணிக்கையாகத் தருகின்றான். இராமனும் அவற்றை அன்புடன் ஏற்கின்றான். 2. திருவா. திருக்கோத்தும்பி - 4 3. அயோத்தி - கங்கைப் - 41