பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

இராமனுடைய தவக்கோலத்தைக் கண்டு வருந்திய

குகன்,

பார்குலாம் செல்வ நின்னை

இங்ஙனம் பார்த்த கண்ணை

ஈர்கிலாக் கள்வ னேன்யான்

இன்னலின் இருக்கை நோக்கித்

தீர்கிலேன் ஆன ஐய

செய்குவென் அடிமை என்றான் 14

அன்று இரவு இராமன் அனுமதியுடன் அங்கேயே தங்கி விடுகின்றான். சேனையுடன் இராமனைக் காத்து நிற்கின்றான். இலக்குவன் மூலம் நகர்நீங்கிய காரணத்தை வினவியறிந்து குகன் அவனுடன் இருக்கின்றான்.

பகுவரல் தம்பி கூறப்

பரிந்தவன் பையுள் எய்தி

இருகணிர் அருவி சோரக்

குகனும்ஆண்டு இருந்தான் என்னே

பெருநிலக் கிழத்தி நோன்றுப்

பெற்றிலன் போலும் என்ன

என்று குகனுடைய வருந்திய நிலையைக் காட்டுவான் கவிஞன்.

மாலை நியமம் முடித்து இராமனும் பிராட்டியும் தரையில் விரித்த நானல் புல்லாலாகிய பாயலில் தங்க, இளையபெருமாள் கைவில் ஏந்தி காலை வாயளவும் இமைப்பு இன்றிக் காத்து நிற்கின்றான். அரண்மனையில் பஞ்சணை மஞ்சத்தில் உறங்க வேண்டியவர்கட்கு இந்நிலை ஏற்பட்டதே என்று பெருங் கவலையுறுகின்றான். 4. மேற்படி - 45 5. மேற்படி - 48