பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பண்புகள் $ 67

இற்றதோர் நெஞ்ச னாகி

இருகணிர் அருவிசோர உற்றவோ வியம்இ தென்ன

ஒருசிலை அதனில் நின்றான்" என்று கூறுவான் கவிஞன்.

குகனும் தன் பரிவாரங்களுடன் இராமனை இரவு முழுவதும் காத்திருக்கின்றான்.

தும்பியின் குழாத்திற் கற்றும்

சுற்றத்தன் தொடுத்த வில்லன் வெம்பிவந்து அழியா நின்ற

நெஞ்சினன் விழித்த கண்ணன் தம்பிநின் றானை நோக்கித்

தலைமகன் தன்மை நோக்கி அம்பியின் தலைவன் கண்ணிர்

அருவிசோர் குன்றின் நின்றான்.” என்று இதனைக் காட்டுவான். இதன் நேர் பொருள் வெளிப்படை தம்பி நின்றானை நோக்கித் தலைமகன் தனிமை நோக்கி அம்பியின் தலைவன், தொடுத்தவில்லனும் அழியா நின்ற நெஞ்சினனும் விழித்த கண்ணனும் ஆகி நின்றது-ஒருகால் இவ்விளையவனால் இராமபிரானுக்கு என்ன தீங்கு நேருமோ? என்னும் கருத்தினால் என்றும் குகன் சுற்றம் தும்பியின் குழாத்திற் சுற்றுவதற்குக் காரணம் இந்தத் தம்பியினாலேனும், இந்தக் குகனாலேனும் இவ்விராமபிரானுக்கு என்ன தீங்கு நேருமோ? என்னும் கருத்தினால் என்றும் உரைக்க வழி அமைகின்றது.

இவ்வாறு உரைப்பது: வைணவ சம்பிரதாயத்துப் பூர்வாசார்யர்களின் ரீசூக்திகளுக்கு ஏற்றதாகும்.

6. மேற்படி - 53 7. அயோத்தி. கங்கைப் - 54