பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பண்புகள் , 89

அப்படி ஏதேனும் ஒரு தீங்கு நினைக்கில் இவனைத் தீரக் காணக் கடவோம் என்று வில்லும் கோலுமாகக் கொண்டு இவர் இளையபெருமாள்) இட்ட அடியிலே அடியிட்டு நிற்க,

"பூரீகுகப் பெருமான் ஏவல் தொழில் செய்து திரியும் சேனை, அவன் இளைய பெருமாள் ஞாதி; இவன் குறும்பனான வன்னியன்; இவர்கள் இருவருமாக இவ்விஷயத்தை என் செய்யத் தேடுகிறார்களோ! என்று இருவரையும் ஐயம் கொண்டு, அப்படிச் செய்யில் இவர்களை அழியத் செய்தும் தாம் அத்தலையை நோக்கக் கடவோம் என்று தனித்தனியே கையும் வில்லுமாய்க் கொண்டு பெருமாளைக் காப்பாற்றியதல்லவா?”

நாவாய்மூலம் கங்கை நதியைக் கடந்து அதன் தென்கரையை அடைகின்றனர் அயோத்தி அரசகுமரர்கள். குகன் தன்னையும் உடன் கொள்ள வேண்டுமென்று இராமனை வேண்டுகின்றான்" "அடியேன் உடன் வரும் பேறு பெறுவனேல், செல்லும் அரிதான வழியை இனிதான வழியாகச் செய்து தருவேன். காய், கனி, தேன் ஆகியவற்றைத் தேடித் தவறாமல் தருவேன். செல்லும் இடங்களில் உறைவதற்கேற்ற இடங்கள் அமைத்துத் தருவேன்"(69), "தங்கும் இடங்களைச் சுற்றியுள்ள இடங்களி லெல்லாம் புலி முதலிய கொடிய பிராணிகள் இல்லாதவாறு ஒழித்து, மான்களைப் போன்ற இனிய பிராணிகள் வாழுமாறு செய்வேன். விரும்பிய பொருள்களை உடனுக்குடன் தேடிக் கொணர்ந்து தருவேன். கட்டளையிடும் எச்செயல்களையும் விரைந்து முடிப்பேன். அடியேன் இரவிலும் எளிதாக உலாவும் வல்லமை பெற்றவன்” (70).

10. அயோத்தி - கங்கைப் - 69-92