பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

'கவலைக்கிழங்கு முதலிய எல்லாக் கிழங்குவகை களையும் மலைமீதும் தோண்டி எடுத்துத் தருவேன். தொலைதுாரம் சென்று குடிநீரைக் கொண்டு தரவல்லேன். நொடிப் போதும் நின்னை விட்டு பிரியேன் (7). உமக்குத் திருவுள்ளம் இருப்பின், சேனையுடனும் வருவேன். எல்லாத் தீங்குகளை விளைவிக்கும் பகைவர்கள் ஒருகால் உண்டானால், முன்னம் என் உயிரை மாய்த்துக் கொள்வேன். அதிதியாக வந்தவனை மாற்றார்க்குக் காட்டிக் கொடுத்தான் என்ற வசைச் சொல்லுக்கு இடம் இல்லாமல் செய்து கொள்வேன்" (7.2.

இங்ங்ணம் அன்பு ஒழுகப் பேசும் குகனுக்கு இராமன் சமாதானம் சொல்லி இருக்குமிடத்தில்தானே இருக்குமாறு பணித்தலிலும் அன்பு ஒழுகுகின்றது.

அன்பு ஒரு நெகிழ்ச்சிப் பண்பு. அது தொடர்புடை யாரிடத்தில் கண்ணிராய்த் தோன்றும். தடுக்கமுடியாத நிலையில் வாய்வாளாமையோடு செயல் அடக்கத்தோடு, கண்ணிர் வழியாக எப்படியும் அன்பு புலப்பட்டு விடுகின்றது. உடலால் தொண்டு செய்ய அன்பு தயங்காது; தேவையென்றால் உடலை வழங்கவும் அன்பு துணிந்து விடும். "தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதியஞ்சிச் சீரை புக்க" சோழன்து பேரன்பை ஈண்டு நினைவு கூர்ந்து மகிழலாம். தொண்டு நன்கு பெருகவும் அன்பு உதவுகின்றது. அடக்கமுடியாத பேரன்பினால் தொடர்புடையாரைக் கடியவும் செய்கின்றோம்.

அன்பு உயிரின் பண்பு. "அன்புடை ஆருயிர்" என்று

குறிப்பிடும் மணிமேகலை. உயிர் நெகிழ்ந்தால் மனம் நெகிழ்வதும், உடல் நெகிழ்வதும் இயல்பு. நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, 11. புறம் - 42

12. மணிமே. 25:170