பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பண்புகள் 71

அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெடுத்த கண்ணிர் அதனால் உடம்பு, நனைந்து நனைந்து.அந்த அன்பில் தோய்ந்த நன்மொழிகள் வனைந்து வனைந்து சிறப்பது இந்த உயிர்ப் பண்பு". இங்ங்னம் வடலூர் வள்ளல் பெருமான் அன்பின் திறங்களை அதன் இயல்பு தோன்ற அழகாக எடுத்து விளக்குவார், "அன்பின் வழிஇயது உயிர்நிலை" (80) என்னும் சிறு தொடரால் வள்ளுவர் பெருமான் இவ்வியல்புகளைத் தொகுத்து உரைப்பார்.

மேலே கூறியவாறு குகனின் அன்புரைகளைக் கேட்ட இராமனும், "நீ என் உயிர் போன்றவன், தம்பி உன் இளையான்; இச்சிதை உன் தோழி. இந்த பூமி முழுதும் நின் சொத்தாகும்" நான் உன் ஏவல் தொழிலில் கட்டுப்படும் உரிமையில் உள்ளேன்” (73). துன்பம் உண்டானால்தானே சுகமும் உண்டாகும் : வெயிலில் அடிபட்டார்க்கு நிழலினருமை தெரிவது போல நாம் இருவரும் பிரிந்து அதனால் தோன்றும் வருத்தத்தை அதுவித்தால்தான் நாம் பின்னர்க் கூடும்போது அஃது இனிதாகத் தோன்றும். உண்மை இப்படியிருக்க துன்புற்றால்தான் இன்பம் ஊளதாம் என்று நினையாமல், பின்னர் வரப்போகும் இன்பத்திற்கு இடையே இப்போது பிரிவுத் துன்பம் நேர்கின்றதே என்று வருந்தற்க. நீ நினைக்க வேண்டியது இது. முன்பு தசரதச் சக்கரவர்த்திக்குக் குமாரர்கள் நால்வர். இப்போது உன்னையும் எம்மிற் சேர்த்துக் கொண்டதனால்சக்கரவர்த்தியின் குமாரர்கள் ஐவரானோம் என்று நமக்கு ஏற்பட்ட அன்பையே நினைக்கவேண்டும்” (74).

“எனக்குத் துன்பம் நேரும்போது அதனைத் தாங்குவதற்கு உன் தம்பி இலக்குவன் துணையாக

13. திருவருட்பா - ஆறாந்திருமுறை - மரணமிலாப் பெருவாழ்வு-1 14. இதனை ஒத்த திருமங்கையாழ்வாரின் பாசுரம் பெரி. திரு. 5.81 பிறிதோரிடத்தில் காட்டப் பெற்றுள்ளது.